Home வாழ் நலம் நீரிழிவு நோயாளிகளுக்கு புழுங்கல் அரிசி

நீரிழிவு நோயாளிகளுக்கு புழுங்கல் அரிசி

1230
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜூலை 1- இந்தியர்கள்  காலம் காலமாக  2 வகை அரிசி சாப்பிட்டு வருகிறார்கள்.

பச்சரிசி, புழுங்க அரிசி என்ற அந்த இரண்டுக்கும் தனித்தனி சிறப்புத் தன்மைகள் உண்டு. தமிழர்கள் மருந்தே உணவு, உணவே மருந்து என்ற அடிப்படையில் வாழ்ந்தவர்கள்.

RICEபச்சரிசி உணவை சாப்பிட்டால் அதில் உள்ள சர்க்கரை உடனே ரத்தத்தில் கலந்து விடும். இதனால் தான் உடனடி சத்து தேவைக்காக பச்சரிசி உணவை உண்ணச் சொல்கிறார்கள் மருத்துவர்கள். வளரும் குழந்தைகளுக்கு பச்சரி உணவு தான் ஏற்றது.

#TamilSchoolmychoice

ஆனால் நீரிழிவு நோயாளிகள் இதை உண்ணக் கூடாது. புழுங்கல் அரிசியை உணவாக கொண்டால் அதில் உள்ள சர்க்கரை மெருவாகத் தான் ரத்தத்தில் கலக்கும். அதனால் நீரிழிவு நோயாளிகள் புழுங்கல் அரிசியை உண்ணலாம்.

இந்த அரிசி சற்று பழுப்பு நிறமாக இருப்பதால் சிலருக்கு பிடிப்பதில்லை. இந்த நிறம் தான் இந்த அரிசியின் சிறப்புக்கே காரணம். நெல்லை அவிக்கும் போது தவிட்டில் உள்ள உயிர்ச்சத்துகள் அரிசியில் இறங்கும். இதனால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கூடுதாலக் கிடைக்கின்றன.

IFமுன்பெல்லாம் நெல்லை அவிக்கும் முன் நீரில் கொட்டி நன்றாக ஊற வைப்பார்கள். அதன் பின்பு ஊறிய நெல்லை அவிக்கும் பாத்திரத்தில் போட்டு தேவையான அளவு நீர் சேர்த்து வேக வைப்பார்கள். இப்போதெல்லாம் நெல்லை நேரடியாக நீராவியில் வேக வைக்கும் முறை வந்து விட்டது.

அதனால் ஊற வைக்கும் போது வீணாகும் உயிர்ச்சத்து. இப்போது நீராவியில் வேக வைப்பதால் முழுவதுமாக கிடைக்கின்றன, இந்த முறையில் இன்னும் கூடுதலாக உயிர்ச்சத்துக்கள் புழுங்கல் அரிசிக்கு கிடைக்கும் வாய்ப்புள்ளது.

இதனால் தான் உடலுழைப்பு அதிகம் உள்ளவர்கள் புழுங்கல் அரிசியையும், உடலுழைப்பும் குறைவானவர்கள் பச்சரிசியும் சாப்பிடும் முறையை குறைவானவர்கள் வகுத்தார்கள். நீரிழிவு நோயளிகள் பச்சரி சாப்பிடுவதை விட புழுங்கல் அரிசி சாப்பிடுவது மேலானது.