கோலாலம்பூர், ஜூலை 6 – சர்ச்சைக் குரிய மதம் மாற்றுச் சட்டம் நேற்று வாபஸ் பெறப்பட்டது குறித்து, மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள பத்திரிகை அறிக்கையில், “அமைச்சரவை மதம் மாற்றுச் சட்டம் குறித்த மசோதாவை ஆராய்ந்து, வாபஸ் பெறுவதாக முடிவெடுத்துள்ளது.
இவ்விவகாரத்தில் அனைவரின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்ததில் மகிழ்ச்சி” என்று குறிப்பிட்டுள்ளார்.
நாடு முழுவதும் சர்ச்சைகளை எழுப்பி, முஸ்லீம் அல்லாதவர்களின் கண்டனத்துக்கு உள்ளானதோடு, அமைச்சரவையிலும் பிளவை ஏற்படுத்திய மதம் மாற்று சட்டம் அரசாங்கத்தால் வாபஸ் பெறப்பட்டது என துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொய்தீன் யாசின் நேற்று அறிவித்தார்.
ம.இ.கா இவ்விவகாரத்தில் இறுதிவரை, குழந்தைகளை மதம் மாற்றம் செய்ய பெற்றோர் இருவரின் சம்மதமும் தேவை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது குறிப்பிட்டார்.