ஜூலை 8- மகாபோதி கோவிலில் குண்டுகள் வெடித்த தகவல் அறிந்ததும் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச கடும் அதிர்ச்சி அடைந்தார்.
பிறகு அவர் வெளியுறவுத் துறை அதிகாரிகளிடம் இது தொடர்பாக தகவல்களை சேகரித்து தர உத்தரவிட்டார்.
டெல்லியில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகளிடமும், மகாபோதி கோவில் குண்டு வெடித்தது பற்றி விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டார்.
புத்த கயாவில் உள்ள இலங்கை யாத்ரீகர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
Comments