Home உலகம் கொழும்பு துறைமுகத்தில் சீனா கட்டிய கண்டெய்னர் முனையத்தை ராஜபக்ச திறந்து வைத்தார்

கொழும்பு துறைமுகத்தில் சீனா கட்டிய கண்டெய்னர் முனையத்தை ராஜபக்ச திறந்து வைத்தார்

695
0
SHARE
Ad

கொழும்பு, ஆக.6- சீனாவின் உதவியுடன் கொழும்பு துறைமுகத்தில் கட்டப்பட்ட கண்டெய்னர் டர்மினலை இலங்கை அதிபர் ராஜபக்ச நேற்று திறந்து வைத்தார்.

dff35181-bd6c-46a6-a7d5-51d515267683இலங்கை கடற்பகுதியின் கொழும்பு துறைமுகத்தில் ஆண்டு தோறும் 24 லட்சம் கண்டெய்னர்களை கையாளும் திறன் வாய்ந்த முனையத்தை சீனா கட்டி வந்தது.

இந்த முனையத்தை நேற்று இலங்கை அதிபர் ராஜபக்ச திறந்து வைத்தார்.

#TamilSchoolmychoice

இந்த முனையத்தை கட்டும் வாய்ப்பை இந்தியாவிடம் இருந்து தட்டிப் பறித்த சீனா, இதன் மூலம் இந்திய பெருங்கடல் பகுதியில் வலுவாக காலூன்ற முயற்சித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

photo_1375707529360-1-0இந்த முனையத்தை கட்டுவதற்கான நிதியுதவியை சீன அரசே ஏற்றுக்கொண்டதால் தான் நாங்கள் இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தோம்.

வணிக நோக்கத்திற்கு அப்பாற்பட்ட எவ்வித ராணுவ பயிற்சிக்கோ, ஒத்திகைக்கோ இந்த முனையத்தை யாரும் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என இலங்கை துறைமுகங்களுக்கான ஆணையாளர் பிரியத் பண்டு விக்ரமா தெரிவித்தார்.