Home நாடு குற்றவாளிகளின் எண்ணிக்கையை மிகைப்படுத்தி கூற வேண்டாம் – சாஹிட்டுக்கு லிம் பதிலடி!

குற்றவாளிகளின் எண்ணிக்கையை மிகைப்படுத்தி கூற வேண்டாம் – சாஹிட்டுக்கு லிம் பதிலடி!

468
0
SHARE
Ad

Lim Guan Engகோலாலம்பூர், ஆகஸ்ட் 12 – உள்துறை அமைச்சர் அகமட் சாஹிட் ஹமீடி நாட்டில் உள்ள குற்றவாளிகளின் எண்ணிக்கை குறித்து கணக்கு சொல்வதை நிறுத்திவிட்டு, வீதிகளில் சுதந்திரமாக சுற்றித்திரியும் அது போன்ற குற்றவாளிகளை அடக்க காவல்துறையின் நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும் என்று பினாங்கு முதலமைச்சர் லீ குவான் எங் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் உத்துசான் மலேசியா நாளிதழுக்கு சாஹிட் அளித்திருக்கும் அதிர்ச்சி தரக்கூடிய தகவல் மிகவும் மிகைப்படுத்தப்பட்டது என்றும், நாட்டில் உள்ள காவல்துறையினரின் எண்ணிக்கை 112,583 மற்றும் மலேசியப் படையினரின் எண்ணிக்கை 124,000 இவை இரண்டையும் கூட்டினால் கூட சாஹிட் கூறிய குற்றவாளிகளின் எண்ணிக்கை 2 லட்சத்து 60 ஆயிரத்தை எட்ட முடியாது என்றும் லிம் குறிப்பிட்டுள்ளார்.

இந்த காரணத்திற்காக, மலேசிய ஆயுதப் படையினர் மட்டுமல்லாமல், ஐநா வின் அமைதிகாக்கும் படையினரையும் குறைவான எண்ணிக்கையுள்ள மலேசிய காவல்துறைக்கு உதவுமாற்று ஜசெக கேட்டுக்கொள்கிறது என்று தனது அறிக்கையில் லிம் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், மொத்தமுள்ள காவல்துறை மற்றும் மலேசியப் படையினரில் 9 சதவிகிதத்தினரே குற்றங்களுக்கு எதிராகப் போராடுவதாகவும், இந்த எண்ணிக்கை 50 சதவிகிதமாக அதிகரிக்க வேண்டும் என்றும் லிம் தெரிவித்துள்ளார்.

அகற்றப்பட்ட அவசரகாலச் சட்டத்தை மீண்டும் கொண்டு வருவதா, வேண்டாமா என்று இரு பிரிவுகளுக்கிடையே நடைபெற்று வரும் விவாதத்திற்கிடையே, கடந்த வார இறுதியில் சாஹிட் வெளியிட்டுள்ள கருத்தில், நாட்டில் மொத்தம் 2 லட்சத்து 60 ஆயிரம் குற்றவாளிகள் சுதந்திரமாக சுற்றித் திரிவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அதோடு, மலேசியாவில் குற்றவாளிகளுக்கு எப்படி அவ்வளவு எளிதாக துப்பாக்கி கிடைக்கிறது என்றும் லிம் மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளார்.