Home உலகம் அமெரிக்க அரசின் உயர் பதவியில் இந்தியரை நியமிக்க ஒபாமா பரிந்துரை

அமெரிக்க அரசின் உயர் பதவியில் இந்தியரை நியமிக்க ஒபாமா பரிந்துரை

613
0
SHARE
Ad

வாஷிங்டன், செப் 12- அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்திய அமெரிக்கரான புனீத் தல்வாரை நாட்டின் மிக முக்கிய தூதரக பதவிக்காக பரிந்துரைத்துள்ளார்.

5507855629_a2a2b21616_zமத்தியக் கிழக்கு பகுதிகளுக்கான விவகாரங்களில் கடந்த 4 வருடங்களாக ஒபாமாவின் ஆலோசராக புனீத் தல்வார் விளங்கினார். அவரை, அரசியல் ராணுவ விவகாரங்களுக்கான வெளியுறவு உதவி செயலாளராக நியமிக்க நேற்று ஒபாமா பரிந்துரைத்தார்.

அமெரிக்க அரசுத்துறையின் மிக உயரிய பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள இரண்டாவது நபராக புனீத் தல்வார் விளங்குகிறார்.

#TamilSchoolmychoice

கடந்த ஜூலை மாதம் நிஷா தேசாய் பிஸ்வால் என்பவர் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான வெளியுறவு உதவி செயலாளராக பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த இரு பதவிகளும் செனட் சபையால் உறுதி செய்யப்படவுள்ளது.

Puneetநாட்டின் இந்த உயரிய பதவியை ஏற்றுக்கொள்ள அர்ப்பணிப்பு மற்றும் திறமையுடைய இவர்கள் ஒத்துக்கொண்டு அமெரிக்க மக்களுக்காக பணியாற்ற முன்வந்துள்ளதற்காக நான் அவர்களுக்கு நன்றியுடையவனாக இருக்கிறேன் என்று ஒபாமா கூறியுள்ளார்.

மேலும் வரும் வருடங்களில் அவர்களுடன் சேர்ந்து பணியாற்ற எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.