Home நாடு லாவோஸ் விமான விபத்து 49 பேர் பலி! பலியானவர்களில் மலேசியர் ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது!

லாவோஸ் விமான விபத்து 49 பேர் பலி! பலியானவர்களில் மலேசியர் ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது!

542
0
SHARE
Ad

laosபெட்டாலிங் ஜெயா, அக் 17 – தெற்கு லாவோஸில் நேற்று நடந்த விமான விபத்தில் அதில் பயணம் செய்த 49 பேரும் கொல்லப்பட்டனர். அதில் ஒருவர் மலேசிய நாட்டைச் சேர்ந்த பெண் என்பது தற்போது உறுதியாகியுள்ளது.

இறந்த மலேசிய மாதுவின் பெயர் ஆஞ்சலின் தே என்றும், அவர் ஒரு அமெரிக்க குடிமகனைத் திருமணம் செய்து லாவோஸில் கடந்த 3 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார் என்றும் அங்குள்ள மலேசியத் தூதரகம் தகவல் அளித்துள்ளது.

இவ்விபத்தில் அவரது கணவரும் பலியானது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

இருப்பினும், மலேசியத் தூதரகம் லாவோஸ் அரசாங்கத்திடமிருந்தும், விமானநிலைய அதிகாரிகளிடமிருந்தும் மேலும் தகவலுக்காக காத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளன.