கோலாலம்பூர், ஜன 4 – முன்னணி கணினி உற்பத்தி நிவனங்களுள் ஒன்றாகத் திகழும் ஏசர் (Acer) நிறுவனமாது Iconia B1 எனும் அன்ரோயிட் டேப்லட் ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.
7 அங்கு அளவுடைய தொடுதிரையினைக் கொண்டுள்ள இந்த டேப்லட் ஆனது 1.3 GHz வேகத்தில் செயற்படக்கூடிய செயலி, பிரதான நினைவகமாக 1GB RAM ஆகியவற்றினைக் கொண்டுள்ளது.
இவை 16GB அல்லது 32GB சேமிப்புக்கொள்ளளவுடைய இரு பதிப்புக்களாக வெளியிடப்பட்டுள்ளதுடன் 16GB கொள்ளளவுடைய டேப்லட் 129 யூரோக்கள் எனவும், 32GB கொள்ளளவுடைய டேப்லட் 179 யூரோக்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.