Home நாடு அம்னோ உறுப்பினர் மீது புகார் அளித்துள்ளதை கமலநாதன் உறுதிப்படுத்தினார்!

அம்னோ உறுப்பினர் மீது புகார் அளித்துள்ளதை கமலநாதன் உறுதிப்படுத்தினார்!

848
0
SHARE
Ad

P.KAMALANATHAN-300x221பெட்டாலிங் ஜெயா, ஜன 13 – உலுசிலாங்கூரில் நேற்று நடந்த கிளை கூட்டத்தில் தன்னை தாக்கிய நபர் மீது காவல்துறையில் புகார் அளித்திருப்பதை துணை கல்வியமைச்சர் பி.கமலநாதன் உறுதிப்படுத்தியுள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பாக இன்று செய்தியாளர்கள் கமலநாதனை தொடர்பு கொண்ட போது, “காவல்துறைக்கு எனது அறிக்கையை அனுப்பியுள்ளேன்.அவர்களது விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன். அதுவரை இந்த விவகாரம் குறித்து கருத்துத் தெரிவிக்க நான் விரும்பவில்லை காரணம் அது காவல்துறையின் விசாரணைக்கு இடையூறாக இருக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.

உலுசிலாங்கூரில் நேற்று நடந்த கிளை கூட்டத்தில் கலந்து கொள்ள சென்ற கமலநாதன் உலுசிலாங்கூர் அம்னோ உறுப்பினர் ஒருவரால் தாக்கப்பட்டார்.இது குறித்து காவல்துறை தற்போது விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

#TamilSchoolmychoice

 

Comments