Home நாடு கள்ளக்குடியேறிகளுக்கு எதிரான வேட்டை! 1500 பேருக்கும் மேல் கைது!

கள்ளக்குடியேறிகளுக்கு எதிரான வேட்டை! 1500 பேருக்கும் மேல் கைது!

606
0
SHARE
Ad

zahidகோலாலம்பூர், ஜன 22 – மலேசியாவில் உள்ள கள்ளக்குடியேறிகளுக்கு எதிரான காவல்துறையின் வேட்டையில் நேற்று 1,565 பேர் பல்வேறு சட்ட விதிமுறை மீறல் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதில் 695 பேர் இந்தோனேசியர்கள், 225 பேர் வங்காள தேசத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் 157 பேர் மியாந்மர் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று காவல்துறை அறிக்கை விடுத்துள்ளது. இவர்களோடு ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்களும்,நைஜீரியாவைச் சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று நடந்த 107 நடவடிக்கைகளில் 6,149 பேரின் ஆவணங்கள் சோதனையிடப்பட்டதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹமீடி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

கைது செய்யப்பட்டுள்ள அந்நியத் தொழிலாளர்களின் முதலாளிகளில் யாரேனும் முறையான ஆவணங்கள் வைத்திருந்தால், அவர்கள் தாங்களாகவே முன்வந்து ஆவணங்களைக் காட்டி தொழிலாளர்களை மீட்டுக் கொள்ளும் படி சாஹிட் அறிவுரை கூறியுள்ளார்.

கடந்த வருடம் அக்டோபர் 21 தேதி அரசாங்கம் 3 மாத திட்டம் ஒன்றை அறிவித்தது. அதன்படி அந்நியத்தொழிலாளர்கள் யாரேனும் போலி முகவர்களிடம் ஏமாந்து மலேசியாவில் தகுந்த ஆவணங்கள் இன்றி வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்தால், அவர்கள் தங்கள் நிலை குறித்து விண்ணப்பித்து தங்களை தற்காத்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.