Home நாடு “மந்திரிபெசாராக, அன்வார், சுல்தான்கள் மாநாட்டில் மக்களைப் பிரதிநிதிக்க முடியும்” – ஹிஷாமுடின் ராய்ஸ்

“மந்திரிபெசாராக, அன்வார், சுல்தான்கள் மாநாட்டில் மக்களைப் பிரதிநிதிக்க முடியும்” – ஹிஷாமுடின் ராய்ஸ்

653
0
SHARE
Ad

Anwar-Ibrahim-300x202ஜனவரி 31 – காஜாங் சட்டமன்ற இடைத் தேர்தலில் அன்வார் இப்ராகிம் போட்டியிடப் போவதைத் தொடர்ந்து நாடு முழுவதும் மாறுபட்ட கருத்துக்கள் கூறப்பட்டு வருகின்றன.

#TamilSchoolmychoice

நேற்று நடைபெற்ற அன்வார் காஜாங்கிலிருந்து புத்ரா ஜெயா நோக்கி என்ற கருத்தரங்கில் உரையாற்றிய சமூகப் போராட்டவாதியும் எதிர்க்கட்சி ஆதரவாளருமான ஹிஷாமுடின் ராய்ஸ் காஜாங் சட்டமன்ற உறுப்பினராக அன்வார் தேர்ந்தெடுக்கப்படுவதைத் தான் ஆதரிப்பதாகக் குறிப்பிட்டார்.

காஜாங்கில் வென்று அன்வார் இப்ராகிம் சிலாங்கூர் மந்திரி பெசாராக நியமிக்கப்பட்டால் அதன் மூலம் அவர் சுல்தான்கள் மற்றும் ஆளுநர்களின் மாநாட்டில் கலந்து கொண்டு எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாக வாக்களித்த 52 சதவீத மக்களின் விருப்பு வெறுப்புகளை அவர்களின் முன் எடுத்து வைக்க முடியும் என்றும் ஹிஷாமுடின் கூறினார்.

உதாரணமாக அதே மாநாட்டில் கலந்து கொள்ளும் பினாங்கு மாநில முதல்வர் லிம் குவான் எங், அல்லாஹ் விவகாரம் குறித்து பேசினால் அவரது கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளப்படுமா என்பது சந்தேகமே! ஆனால் அதே வேளையில் அன்வார் சிலாங்கூர் மந்திரி பெசாராக அந்த மாநாட்டில் கலந்து கொண்டு அதே அல்லாஹ் விவகாரம் குறித்து பேசினால் அதன் தாக்கமே வேறுவிதமாக இருக்கும்” என்றும் ஹிஷாமுடின் தெரிவித்தார்.

பேரரசரும், மலாக்கா, பினாங்கு, சபா சரவாக் மாநிலங்களின் ஆளுநர்களும் மலேசிய நாட்டின் ஒன்பது சுல்தான்களும் கலந்து கொள்ளும் மாநாடு ஆண்டுக்கு ஓரிரு முறை நடத்தப்படும் முக்கியமானதொரு மாநாடாகும். இந்த மாநாட்டில் பிரதமரோடு மாநிலங்களின் முதலமைச்சர்களும் மந்திரி பெசார்களும் கலந்து கொள்வார்கள்.

அன்வார் இப்ராகிம், காஜாங் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, சிலாங்கூர் மாநில மந்திரி பெசாராக நியமனம் பெற்றால் இந்த முக்கியமான ஆளுநர்கள், சுல்தான்கள் மாநாட்டில் பிரதமரோடு கலந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.