Home இந்தியா டில்லி முதல்வர் ராஜினாமா!

டில்லி முதல்வர் ராஜினாமா!

514
0
SHARE
Ad

Kejriwal-300X200புதுடில்லி, பிப்ரவரி 15 – இந்திய அரசியலை ஒரு கலக்கு கலக்கி வந்த டில்லி மாநிலத்தின் முதலமைச்சர் அர்விர்ந்த் கெஜ்ரிவால் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் அரசாங்கம் சமர்ப்பித்த ஜன் லோக்பால் சட்டம் சட்டமன்றத்தில் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் தனது ராஜினாமாவைச் சமர்ப்பித்தார்.

இதனைத் தொடர்ந்து  49 நாட்கள் மட்டுமே நீடித்த அவரது ஆட்சி ஒரு முடிவுக்கு வந்தது. இருப்பினும் “முதல்வன்” தமிழ்ப்பட பாணியில் அந்த 49 நாட்களில் அவர் ஆட்சி நடத்திக் காட்டிய விதத்தில் அவர் பல மாற்றங்களைக் கொண்டு வந்தார்.

எல்லாவற்றையும் விட முக்கியமாக, இந்திய அரசியலில் ஊழலை ஒழிக்க, என்னவெல்லாம் செய்யலாம் என்பதை மக்களுக்கு எடுத்துக் காட்டி, இந்திய அரசியல் சரித்திரத்திலும், மக்கள் மனங்களிலும் நீங்காத இடத்தைப் பிடித்துவிட்டார் கெஜ்ரிவால்.

#TamilSchoolmychoice

டில்லி சட்டமன்றத்தில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத பட்சத்தில் தற்போது மீண்டும் தேர்தலை நடத்துவதற்கும் கெஜ்ரிவால் பரிந்துரைத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மீண்டும் நடக்கப் போகும் டில்லி சட்டமன்றத் தேர்தலில் அவரது கட்சி தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்குமா என்ற பரபரப்பான கேள்வியை நாட்டு மக்களின் முன்னால் அவர் வைத்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் வேளையில் தனது ராஜினாமா மூலம், ஒட்டு மொத்த இந்தியாவையும் தன் பக்கம் பார்வையைத் திருப்பிப் பார்க்க வைத்துள்ளார் கெஜ்ரிவால்.

இதனால்,  தற்போது கிடைத்துள்ள வரவேற்பை வைத்து நாடாளுமன்றத் தேர்தலிலும் அவரது ஆம் ஆத்மி கட்சி கணிசமான நாடாளுமன்ற இடங்களைப் பிடிப்பதோடு, அடுத்த மத்திய அரசாங்க ஆட்சியைக் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படும் பா.ஜ.க.விற்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.