Home இந்தியா ஆம்ஆத்மி போல் எக்கட்சியாவது பாடுபட்டால் அரசியலில் இருந்தே விலகத்தயார்-கெஜ்ரிவால்!

ஆம்ஆத்மி போல் எக்கட்சியாவது பாடுபட்டால் அரசியலில் இருந்தே விலகத்தயார்-கெஜ்ரிவால்!

527
0
SHARE
Ad

VBK-KEJRIWAL_1186774fரோதக், பிப் 24 – டீ விற்றதாக கூறிக்கொள்ளும் நரேந்திர மோடிக்கு ஹெலிகாப்டர் வந்தது எப்படி என்று ஆம்ஆத்மி கட்சித் தலைவர் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஹரியானா மாநிலம் ரோதக்கில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய கெஜ்ரிவால், மோடியின் ஒவ்வொரு தேர்தல் பிரச்சார பேரணிக்கும் ரூ.50 கோடி செலவாகிறது என்றும் குறிப்பிட்டார். ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானிக்கும், பாஜகவிற்கும் என்ன தொடர்பு என்று கேள்வி எழுப்பினார்.

பின்னர் மோடியின் பேரணி செலவுகளுக்கு பணம் கொடுப்பவர் முகேஷ் அம்பானி என்று பரபரப்பு குற்றச்சாட்டையும் கெஜ்ரிவால் தெரிவித்தார். கடினமான கேள்விகளை மோடியின் முன் மக்கள் வைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளதாகவும் கெஜ்ரிவால் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

நரேந்திர மோடியை ஊடகங்கள் தான் பெரிய தலைவராக காட்டுவதாகவும், அம்பானியின் சுவிஸ் வங்கிக் கணக்கு எண்ணை தர தாம் தயாராக இருப்பதாகவும் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர் முகேஷ் அம்பானி மீது பாஜக நடவடிக்கை எடுக்கத் தயாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.மோடியும், ராகுல் காந்தியும் அம்பானியின் சட்டைப் பையில் உள்ளதாகவும் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார். கெஜ்ரிவாலின் அதிரடி குற்றச்சாட்டுக்களால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை துவக்கி பேசிய கெஜ்ரிவால், ஆம்ஆத்மி போல் எந்தக் கட்சியாவது பாடுபட்டால் அரசியலில் இருந்தே விலகத் தயார் என்றும் சவால் விடுத்துள்ளார்.

டெல்லியில் பெரும்பான்மை பலத்தோடு ஆட்சி அமைத்தால் ஊழலை முற்றாக ஒழிப்போம் என்றும் அவர் குறிப்பிட்டார். கொள்கைக்காகவே முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததாகவும் கெஜ்ரிவால் விளக்கமளித்துள்ளார்.