Home உலகம் புகைப்படக்காரரை திட்டிய அவதார் கதாநாயகன் கைது!

புகைப்படக்காரரை திட்டிய அவதார் கதாநாயகன் கைது!

539
0
SHARE
Ad

0நியூயார்க், பிப் 24 – அவதார் ஹாலிவுட் படத்தில் நடித்த கதாநாயகன் சாம் வொர்திங்டன், புகைப்படக்காரர் ஒருவரை தாக்கியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

உலக அளவில் வசூலை அள்ளிக் குவித்த ஹாலிவுட் படமான அவதாரில் கதாநாயகனாக நடித்தவர் சாம் வொர்திங்டன். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அவர் நியூயார்க்கில் நேற்று மாலை தனது காதலியுடன் வெளியே சென்றுள்ளார்.

அப்போது புகைப்படக்காரரான ஷெங் லி என்பவர் தனது காரை சாமின் காதலியின் காலில் எத்தியுள்ளார். இதை பார்த்த சாமிற்கு கோபம் வந்து லி-யை ஆக்ரோஷமாக திட்டிவிட்டார். இதையடுத்து காவலர்கள் சாம் மற்றும் லியை கைது செய்தனர்.

#TamilSchoolmychoice

எதற்காக லி, சாமின் காதலியை காலில் எத்தினார் என்று தெரியவில்லை. கைதான சாம் சிறிது நேரத்தில் விடுவிக்கப்பட்டார். ஆனால் அவர் வரும் புதன்கிழமை இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்திற்கு வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.