Home உலகம் தாயை அடித்த மகனுக்கு 2400 சவுக்கடி கொடுத்து பல்லை உடைக்க உத்தரவு!

தாயை அடித்த மகனுக்கு 2400 சவுக்கடி கொடுத்து பல்லை உடைக்க உத்தரவு!

573
0
SHARE
Ad

Tamil_Daily_News_2574884892மெக்கா, பிப் 24 – சவுதியில் தாயை தாக்கிய மகனுக்கு 2400 சவுக்கடி மற்றும் மகனின் பல்லை உடைக்கவும் சவுதி நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

சவுதியில் உள்ள மெக்கா நகரைச் சேர்ந்த 30 வயது வாலிபர் ஒருவரும், அவரது 60 வயது தாயாரும் சம்பவத்தன்று காரில் சென்று கொண்டிருந்தனர். இதில் குடும்ப தகராறு காரணமாக இரண்டு பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த மகன், தனது தாயின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இதில் தாயின் பல் உடைந்து படுகாயமடைந்தார்.அப்போது அவ்வழியில் உள்ள சோதனை சாவடியில் இருந்த காவலரிடம் தாய் புகார் செய்தார். இதனையடுத்து மகனை காவலர்கள் கைது செய்தனர். தாயை மருத்துவமனையில் அனுமதித்தனர். இவ்வழக்கு விசாரணை  மெக்கா நீதிமன்றத்தில் நடைபெற்றது.

#TamilSchoolmychoice

இந்த வழக்கில் அந்த வாலிபர் சம்பவத்தின் போது மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இல்லை. குடிபோதையிலோ, போதை பொருட்களையோ எடுத்துக் கொள்ளவுமில்லை. நல்ல மனநிலையில்தான் இருந்துள்ளார் என்று காவலர்கள்  நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி துர்கி அல்காமி பிறப்பித்த உத்தரவில், தாயாரை அடித்து பல்லை உடைத்த மகனுக்கு 2400 சவுக்கடிகள் கொடுக்க உத்தரவிட்டார்.

தாயாரை தாக்கிய குற்றத்திற்காக தண்டனையின் ஒரு பகுதியாக 10 நாட்களுக்கு தினமும் 40 சவுக்கடியை பொது இடத்தில் வைத்து அவருக்கு வழங்க வேண்டும். மேலும் இவர் தாக்கியதால் தாய்க்கு எந்த பல் உடைந்ததோ வாலிபரின் அதே பல்லையும் உடைக்க வேண்டும்.

மேலும் வாலிபர் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த சம்பவம் சவுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.