Home உலகம் அமெரிக்க பொதுத் தேர்தல் போட்டியில் 10 பேர் இந்திய வம்சாவளியினர்

அமெரிக்க பொதுத் தேர்தல் போட்டியில் 10 பேர் இந்திய வம்சாவளியினர்

609
0
SHARE
Ad

Tamil_News_large_922991வாஷிங்டன், பிப் 25 – அமெரிக்கா-2014 பொதுத் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே இருக்கும் நிலையில், இத்தேர்தலில் போட்டியிடப்போவதாக இந்தியவம்சாவளியினர் 10 பேர் அறிவித்துள்ளனர். தற்போது எம்.பி.யாக இருக்கும் அமி பேரா, கலிபோர்னியா மாகாணத்தின் 7வது தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் 3வது முறையாக போட்டியிடும் காங்கிரஸ் உறுப்பினர் இவர் மட்டுமே.

அதே மாகாணத்தின் தலைமை வழக்கறிஞர் பதவிக்கு கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். கலிபோர்னியா மாகாணத்தின் ஆளுநர் பதவிக்கு குடியரசுக் கட்சியைச் சேர்ந்த நீல் கஷ்காரி போட்டியிடுகிறார். இவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் பாபி ஜிண்டாலுக்கு பிறகு 3வது முறையாக கவர்னர் ஆவார்.

அமெரிக்க அதிபர் ஒபாமா அமைச்சரவையில் வர்த்தகத்துறையின் உதவி துணை அமைச்சராக பதவி வகித்த ரோ கன்னா, கலிபோர்னியா மாகாணத்தின் 17வது தொகுதியில் தனது கட்சியின் மைக் ஹோண்டா என்ற வேட்பாளருக்கு எதிராக போட்டியிடுகிறார்.

#TamilSchoolmychoice

ஸ்டான்போர்டு மருத்துவப் பல்கலைக்கழத்தின் உதவிப் பேராசிரியரான வனிலா மாத்தூர் சிங், அதே தொகுதியில் குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார்.

தற்போது, நியூஜெர்ஸி மாகாண சட்டப்பேரவையின் முதல் இந்திய அமெரிக்க அமைச்சராக இருக்கும் உபேந்திர சிவுகுலா, அந்த மாகாணத்தின் 12வது தொகுதியில் போட்டியிடுகிறார். பென்சில்வேனியா மாகாணத்தின் 6வது தொகுதியில் மனன் திரிவேதி போட்டியிடுகிறார்.

விஸ்கான்சின் மாகாணத்தின் 1வது தொகுதியில் அமர்தீப் கலேகா போட்டியிடுகிறார். 2012ஆம் ஆண்டு தேர்தலில் துணை அதிபர் பதவிக்கு போட்டியிட்ட குடியரசுக் கட்சியின் மூத்த தலைவர் பால் ரையான் அதே தொகுதியில் போட்டியிடுகிறார். மஞ்சு கோயல், குடியரசு கட்சி சார்பாக இல்லினாய்ஸ் மாகாணத்தில் போட்டியிட விரும்புகிறார்.