Home கலை உலகம் என் படத்தில் அரசியல் வசனம் வேண்டாம் -கார்த்தி!

என் படத்தில் அரசியல் வசனம் வேண்டாம் -கார்த்தி!

637
0
SHARE
Ad

mgfj9qgbjdaசென்னை, மார் 6 – கார்த்தி தனது படங்களில் பஞ்ச் வசனம் வேண்டாம் என்று கூறி வருகிறார். கார்த்தி காரைக்குடியில் இருந்து கிளம்பி சென்னைக்கு சென்று புதிய அரசையே உருவாக்கினார் சகுனி படத்தில். தமிழகத்தில் புதிய முதல்வர் தேர்வாக காரணமாக இருந்த அவர் மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்க செல்வது போன்று படம் முடிந்தது. சகுனி படம் ஓடாதகாரனத்தால் கார்த்தியின் வளர்ச்சியையும் பதம் பார்த்தது.

சகுனியின் தோல்வியை பார்த்த கார்த்தி காமெடி படங்கள் பக்கம் கவனத்தை திருப்பினார். இதையடுத்து அவர் ஆல் இன் ஆல் அழகு ராஜா, பிரியாணி ஆகிய படங்களில் நடித்தார்.  அரசியல் தான் காப்பாற்றவில்லை என்று பார்த்தால் கார்த்திக்கு காமெடி படங்களும் கை கொடுக்காமல் போனது. இதனால் அவர் வருத்தமடைந்தார்.

கார்த்தி அடுத்து அட்டகத்தி ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிக்கிறார். சுவரில் விளம்பரங்கள் எழுதுபவராக நடிக்கும் கார்த்தி அந்த விளம்பரங்களால் பிரச்சனை ஏற்பட்டு அரசியல்வாதிகளுடன் மோத வேண்டி வருமாம். ஆக இந்த படத்திலும் அரசியல் தான் பிரதானம் போல. மீண்டும் அரசியல் படத்தில் நடித்தாலும் இதில் எந்த கட்சியையும் தாக்கி பஞ்ச் வசனங்கள் வேண்டாம் என்று கூறிவிட்டார் கார்த்தி.

#TamilSchoolmychoice

நாம் ஏதாவது பஞ்ச் பேச அதுவே நமக்கு வில்லனாகிவிடுமோ என்று அஞ்சுகிறார் கார்த்தி.  தலைவா படத்தில் விஜய் பஞ்ச் வசனம் பேசி பட்ட அவஸ்தையை பார்த்து பல நடிகர்கள் பயந்துவிட்டார்களாம். விஜய்க்கே அப்படி என்றால் நமக்கு என்னாகுமோ என்ற கலக்கம் ஏற்பட்டுவிட்டது அவர்களுக்கு. அந்த கலக்கம் கார்த்திக்கும் ஏற்பட்டிருக்கிறது.