Home கலை உலகம் ஷகிலா வேடத்தில் ஆபாசமாக நடிக்க மாட்டேன்-அஞ்சலி ஆவேசம்!

ஷகிலா வேடத்தில் ஆபாசமாக நடிக்க மாட்டேன்-அஞ்சலி ஆவேசம்!

1265
0
SHARE
Ad

tamil-actress-anjali-photos-in-settai-movie-audio-release-7சென்னை, மார் 6 – ஷகிலா வேடத்தில் ஆபாசமாக நடித்து முதலிடம் பிடிக்கவேண்டிய அவசியம் எனக்கில்லை என்றார் அஞ்சலி. அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும், கலகலப்பு என தமிழில் வேகமாக முன்னேறிய நடிகை அஞ்சலி. சித்தியுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தமிழ் படங்களில் நடிப்பதை தவிர்த்து வருகிறார்.

சீதம்மா வாகிட்லே சிறுமல்லே சிட்டு என்ற தெலுங்கு படத்தில் நடித்தார். அப்படம் வெற்றியடைந்தது. ஆனாலும் எதிர்பார்த்தளவுக்கு பட வாய்ப்புகள் வரவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்தார். இந்நிலையில் கவர்ச்சி நடிகை ஷகிலாவின் வாழ்க்கை படத்தில் அஞ்சலி நடிக்க உள்ளதாக தகவல் பரவியது.

இதுபற்றி அஞ்சலி கூறும்போது, ஷகிலா வாழ்க்கை படத்தில் நான் நடிப்பதாக கிசுகிசு வருகிறது. நிச்சயம் அந்த வேடத்தில் நடிக்க மாட்டேன். சினிமாவில் முன்னணி இடத்துக்கு வருவது எப்படி என்பது தெரியும். அதற்காக ஆபாசமாக நடித்து முன்னணி இடத்தைபிடிக்க வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை என அவர் கோபமாக கூறியுள்ளார்.