தெய்வத்திருமகள் படத்தில் நடித்த பேபி சாரா பேத்தியாக நடிக்கிறார். ஒருநாள் விளம்பர படத்தில் நடித்தால் இந்த குழந்தைக்கு ரூ.2 லட்சம் சம்பளம். படத்தில் நடிக்கும்போது 1 நாளைக்கு ரூ. 1 லட்சம் சம்பளம் (மலேசியா-5500வெள்ளி). மொத்தம் 40 நாட்கள் இப்படத்தில் நடித்துள்ளார்.
தமிழில் நான் அறிமுகப்படுத்தியதற்காக சம்பளம் குறைக்கவில்லையா என்கிறார்கள். சினிமா என்பது வியாபாரம் அதை முறைப்படி பின்பற்ற விரும்புகிறேன். நாசர் மகன் லுதுப் என்கிற பாஷா இப்படத்தில் அறிமுகமாகிறார். ஜி.வி.பிரகாஷ் இசை. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார் என கிரீடம் விஜய் கூறினார்.