சென்னை, மார்ச் 8 – மறுமலர்ச்சி இலக்கிய பேரவை சார்பில் நடந்த நூல் வெளியீட்டு விழாவில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசியதாவது, இலங்கையில் நடந்த இறுதி கட்ட போரில் லட்சக்கணக்கான அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக ஐநா சபையில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தீர்மானம் கொண்டு வரப்போகிறது.
இதனால், இலங்கையிலுள்ள தமிழர்களுக்கு எந்தவித பயனும் ஏற்பட போவதில்லை. காரணம், இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பதை தீர்மானத்தில் எந்த இடத்திலும் சுட்டி காட்டவில்லை. இலங்கையில் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கவும், தனி ஈழம் மலர வேண்டும் என்றால் அதற்கு முதலில் மத்திய அரசு மூலம் கிடைக்கப்படும் உதவியை தடுக்க வேண்டும்.
இதற்கு மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலே சாத்தியமாகும். அதற்காகவே பாஜவுடன் மதிமுக கூட்டணி வைத்துள்ளது. இந்த கூட்டணியை கலைக்க மத்திய உளவுத்துறை மூலம் காங்கிரஸ் கட்சி முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது என வைகோ பேசினார்.