Home கலை உலகம் 1 நாளைக்கு ரூ. 1 லட்சம் சம்பளம் பேபி சாரா!

1 நாளைக்கு ரூ. 1 லட்சம் சம்பளம் பேபி சாரா!

723
0
SHARE
Ad

Scroll-Head2643சென்னை, மார்ச் 8 – தெய்வத்திருமகள் படத்தில் விக்ரமின் மகளாக நடித்தவர் பேபி சாரா. தற்போது கிரீடம் விஜய் இயக்கும் சைவம் படத்தில் நடிக்கிறார். இப்படத்தை தயாரித்து இயக்கும் விஜய் கூறியதாவது, குடும்ப பின்னணியில் உருவாகும் படம். தாத்தா நாசர், பாட்டி கவுசல்யாவை பார்க்க பேத்தியுடன் காரைக்குடி செல்கிறது ஒரு குடும்பம் அந்த குடும்பத்தில் நிகழும் சம்பவங்கள்தான் கதை.

தெய்வத்திருமகள் படத்தில் நடித்த பேபி சாரா பேத்தியாக நடிக்கிறார். ஒருநாள் விளம்பர படத்தில் நடித்தால் இந்த குழந்தைக்கு ரூ.2 லட்சம் சம்பளம். படத்தில் நடிக்கும்போது 1 நாளைக்கு ரூ. 1 லட்சம் சம்பளம் (மலேசியா-5500வெள்ளி). மொத்தம் 40 நாட்கள் இப்படத்தில் நடித்துள்ளார்.

தமிழில் நான் அறிமுகப்படுத்தியதற்காக சம்பளம் குறைக்கவில்லையா என்கிறார்கள். சினிமா என்பது வியாபாரம் அதை முறைப்படி பின்பற்ற விரும்புகிறேன். நாசர் மகன் லுதுப் என்கிற பாஷா இப்படத்தில் அறிமுகமாகிறார். ஜி.வி.பிரகாஷ் இசை. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார் என கிரீடம் விஜய் கூறினார்.