Home உலகம் நான்கு புதிய வாயுக்களால் ஓசோன் படலம் பாதிப்பு-ஆய்வில் தகவல்!

நான்கு புதிய வாயுக்களால் ஓசோன் படலம் பாதிப்பு-ஆய்வில் தகவல்!

760
0
SHARE
Ad

Uars_ozone_wavesஓஸ்லோ, மார்ச் 11 – நான்கு புதிய வாயுக்கள் ஓசோனை பாதித்து வருவதாக கிழக்கு அங்கோலியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் அறியப்பட்டுள்ளது. பூமியின் பாதுகாப்பு அடுக்கான ஓசோன் படலம் இன்று பல்வேறு வாயுக்களால் பாதித்து கொண்டே வருகிறது.

புற்றுநோயை காப்பாற்ற ஒசோன் முக்கிய பங்குவகிக்கிறது. கடல் மட்டத்திலிருந்து 20 கி.மீ. முதல் 50 கி.மீ. வரையுள்ள அடுக்கு வாயு மண்டலத்தில் தான் ஓசோன் உள்ளது. புறஊதாக்கதிர் பாதிப்பை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த புறஊதாக்கதிர் மனிதர்களுக்கு புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய ஆபத்தனாவை.

பிரிட்டிஷ் அண்டார்டிக் ஆய்வு குழுவினர் ஓசோன் படலத்தில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதை 1985-ஆம் ஆண்டில் முதல் முறையாக கண்டுபிடித்தனர். இந்த பாதிப்புக்கு காரணம் சி.எப்.சி. வாயுக்கள்தான் என்பது அப்போது கண்டறியப்பட்டது. இதையடுத்து ஓசோனைக் காக்க 1987, செப்டம்பர் 16-ல் கனடாவில் உள்ள மான்ட்ரீல் நகரில் “மான்ட்ரியல் ஒப்பந்தம்” எனும் உடன்பாடு ஏற்பட்டது.

#TamilSchoolmychoice

இதன்படி, ஓசோன் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, செப்டம்பர் 16-ல் “சர்வதேச ஓசோன் பாதுகாப்பு தினம்” கடைப்பிடிக்கப்படுகிறது. 1920-களில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வாயுக்கள் குளிர்சாதனப்பெட்டி, வாசனைத் திரவியங்கள் உற்பத்திக்கு பரவலாக பயன்படுத்தப்படுகிறது.

சி.எப்.சி. வாயுக்களை கட்டுப்படுத்த சர்வதேச அளவில் கருத்தொற்றுமை உருவானது. இதன்மூலம் 1987-ஆம் ஆண்டு முதல் இந்த வாயுக்களை வெளிப்படுத்துவது கட்டுப்படுத்தப்பட்டது. கடந்த 2010-ல் அதற்கு தடையும் விதிக்கப்பட்டது.

ஓசோன் அளவு குறைந்தால் பூமியின் வெப்பம் உயரும். ஓசோன் படலத்தில் ஏற்படும் துளைகள் வழியே பூமியை அடையும் புற ஊதாக்கதிர்கள், காலநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும்.
இதில் மூன்று வாயுக்கள் சி.எப்.சி. வாயுக்கள். மற்றவை ஹைட்ரோ குளோரோ கார்பனாகும். இவை ஓசோன் படலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் திறன் கொண்டவையாகும். இருந்தாலும் சிறிய அளவிலேயே இந்த வாயுக்கள் வெயேற்றுவதாகவும் இவை தற்போதைய நிலையில் அபாயமில்லை என்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.