Home நாடு நாளை முதல் ‘தினக்குரல்’ நாளிதழ் வெளிவராது – உள்துறை அமைச்சு தற்காலிக தடை உத்தரவு!

நாளை முதல் ‘தினக்குரல்’ நாளிதழ் வெளிவராது – உள்துறை அமைச்சு தற்காலிக தடை உத்தரவு!

776
0
SHARE
Ad

Thinakural 27 March - 440 x 215மார்ச் 27 – மலேசியாவில் வெளிவரும் ஆறு தமிழ்ப் பத்திரிக்கைகளில் ஒன்றான தினக்குரல் நாளை முதல் வெளிவராது என்றும், அந்தப் பத்திரிக்கையை உள்துறை அமைச்சு மூன்று மாதங்களுக்குத் தற்காலிகத் தடை செய்துள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

தடை உத்தரவுக்கான காரணங்கள் என்ன என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இன்று வெளிவந்த தினக்குரல் பத்திரிக்கையின் முதல் பக்கத்தில் இது குறித்து அந்தப் பத்திரிக்கையின் ஆசிரியர் பிஆர்.இராஜன் அறிவிப்பு ஒன்றை எழுதி வெளியிட்டிருக்கின்றார். அதன்படி, தினக்குரல் நாளை முதல் வெளிவராது என்றும், மூன்று மாதங்களுக்கு அந்தப் பத்திரிக்கையைத் தற்காலிகத் தடை செய்து உள்துறை அமைச்சு உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் அவர் எழுதியிருக்கின்றார்.

தமிழுக்கு வந்த சோதனை என்ற தலைப்பில் பிஆர்.இராஜன் எழுதியுள்ள அந்தக் கட்டுரையில் தாங்கள் தடை உத்தரவுக்கு எதிராக மேல் முறையீடு செய்திருப்பதாகவும், ஆனால் பதில் எத்தனை நாட்கள் ஆகும் என்பது தங்களுக்குத் தெரியவில்லை என்றும் இராஜன் குறிப்பிட்டுள்ளார்.

புதிய நாளிதழ் புதிய பார்வை

தான் எழுதியுள்ள கட்டுரையில் தினக்குரலுக்கு பதிலாக அதே ஊழியர்களுடன் புதிய பார்வை என்ற மற்றொரு நாளிதழைத் தாங்கள் வெளியிடவிருப்பதாகவும் இராஜன் தெரிவித்துள்ளார்.

உள்துறை அமைச்சின் அங்கீகாரத்தைப் பெற்ற புதிய பார்வை என்ற பத்திரிக்கை ஒரு ம.இ.கா. தலைவரின் ஆதரவு பெற்ற பத்திரிக்கை என்று ம.இ.கா வட்டாரங்கள் தெரிவித்தன.

தினக்குரல் வெளிவரும் வரை அதே பாணியில் அதே கோணத்தில் புதிய பார்வை பத்திரிக்கை வெளிவரும் என்றும், அதற்கும் வாசகர்கள் தங்களின் ஆதரவை வழங்கி வர வேண்டும் என்றும் பிஆர் இராஜன் கேட்டுக் கொண்டுள்ளார்.

தினக்குரலுக்கான மேல் முறையீடு வெற்றி பெற்றால், புதிதாக வெளிவர இருக்கும்  புதிய பார்வை நிறுத்தப்படுமா அல்லது அதுவும் தொடர்ந்து வெளிவருமா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

அவ்வாறு புதிய பார்வையும் தொடர்ந்து வெளிவந்தால், அச்சின் வழி மலேசியாவில் வெளிவரும் நாளிதழ்களின் எண்ணிக்கை ஏழாக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.