Home இந்தியா அருணாச்சல முதல்வர் போட்டியின்றி தேர்வு!

அருணாச்சல முதல்வர் போட்டியின்றி தேர்வு!

501
0
SHARE
Ad

downloadஇடா நகர், மார்ச் 28 – வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சல பிரதேசத்தில், அடுத்த மாதம், 9-ல், நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில், ஆளும் காங்கிரஸ் கட்சியின் முதல்வர், நபம் துகி மற்றும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.

மொத்தம், 60 சட்டசபை தொகுதிகளையும், இரண்டு, நாடாளுமன்றத் தொகுதிகளையும் கொண்ட, அருணாச்சல பிரதேசத்தில், அடுத்த மாதம், 9-ல், தேர்தல் நடைபெறுகிறது.

அருணாச்சல பிரதேச தேர்தலுக்கான வேட்பு மனு வாபஸ் பெற, கடந்த, 26-ஆம் தேதி, கடைசி நாள். அதில், முதல்வர்  நபம் துகி மற்றும் 11 காங்கிரஸ்  நாடாளுமன்ற உறுப்பினர்களை எதிர்த்து, வேறு யாரும் போட்டியிடாததால், அவர்கள், 11 பேரும் போட்டியின்றி தேர்வானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

சீன எல்லையை ஒட்டி அமைந்துள்ள, இந்த மாநில தேர்தலில், காங்கிரசுடன், பா.ஜ., தேசியவாத காங்கிரஸ், “ஆம் ஆத்மி’ உட்பட பல கட்சிகள் போட்டியிடுகின்றன. பல ஆண்டுகளாக காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்து வரும் இம்மாநிலத்தில், 2003 – 2007 வரை, பா.ஜ., ஆட்சி நடந்தது.