Home India Elections 2014 தமிழகம், புதுவை உட்பட 117 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு!

தமிழகம், புதுவை உட்பட 117 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு!

505
0
SHARE
Ad

electionnசென்னை, ஏப்ரல் 23 – தமிழகம், புதுவை, காஷ்மீர், மகாராஷ்டிரா,உத்திரபிரதேசம், உள்ளிட்ட 12 மாநிலங்களில் உள்ள 117 தொகுதிகளில் நாளை 6-வது கட்ட வாக்கு பதிவு நடைபெறுகிறது.

9 கட்டங்களாக நடைபெறும் மக்களவைத் தேர்தலுக்கான 6-வது கட்ட வாக்கு பதிவு நாளை நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக 39 தொகுதிகளுக்கும் நாளை வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

அதேபோல் புதுச்சேரி – 1,  அசாமில் 6 தொகுதிகளிலும், பீகார் மற்றும் சத்தீஸ்கரில் தலா 7 தொகுதிகளிலும், காஷ்மீரில் ஒரு தொகுதிக்கும், ஜார்கண்டில் 4 தொகுதிகளுக்கும்  வாக்குபதிவுகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

#TamilSchoolmychoice

இதேபோல் மத்திய பிரதேசத்தில் உள்ள 10 தொகுதிகள், மகாராஷ்டிராவில் 19, ராஜஸ்தானில் 5 உத்திரபிரதேசத்தில் 12 மற்றும் மேற்கு வங்கத்தில் 6 தொகுதிகளிலும் வாக்கு பதிவு நடைபெறவுள்ளது. election

மொத்தம் 117 தொகுதிகளில் 1988 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தமிழகத்தில் அதிமுக, திமுக , பாஜக , காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் என 5 முனைப் போட்டி நிலவுகிறது. இவர்களுடன் ஆம் ஆத்மி கட்சியும் மோதுகிறது.

இந்த தேர்தலில் நடிகையும் பாஜக வேட்பாளருமான ஹேமமாலினி, சமாஜ் வாடி கட்சி தலைவர் முயலாம் சிங், பாஜக மூத்த  தலைவர் சுஷ்மா ஸ்வராஜ்  உள்ளிட்ட தலைவர்கள் போட்டியிடுகின்றனர். நக்சலைட்டுகள் அதிகம் உள்ள சத்தீஸ்கர்,ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.