Home உலகம் ஷேக்ஸ்பியரின் 450-ஆவது பிறந்தநாள் – இங்கிலாந்தில் கோலாகலக் கொண்டாட்டம்!

ஷேக்ஸ்பியரின் 450-ஆவது பிறந்தநாள் – இங்கிலாந்தில் கோலாகலக் கொண்டாட்டம்!

700
0
SHARE
Ad

celebrationலண்டன், ஏப்ரல் 24 – நாடக உலகின் தந்தை என்று போற்றப்பட்ட வில்லியம் ஷேக்ஸ்பியரின் 450-ஆவது பிறந்தநாளை நேற்று இங்கிலாந்து அரசு பல தனிப்பட்ட திட்டங்கள் மூலம் கொண்டாடியது.

இவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக நேற்று அங்குள்ள புகழ்பெற்ற அரங்கில் கண்காட்சி ஒன்று தொடங்கப்பட்டது. ஆங்கிலம் பேசும் உலக நாடுகள் அனைத்திலும் அதிக அளவில் மேற்கோள்காட்டப்பட்ட எழுத்தாளர் என்ற பெருமையை மற்றவர்களைவிட இவரையே அதிகம் சாரும்.

அவரது உண்மையான பிறந்த நாள் தெரியாதபோதும், ஏப்ரல் 23-ஆம் தேதியை இங்கிலாந்து அவரது நினைவாகக் கொண்டாடி வருகின்றது.

#TamilSchoolmychoice

ஷேக்ஸ்பியர் பிறந்த இடத்தில் உள்ள தேவாலயத்தில் அவரது நினைவு அறக்கட்டளை உலகளாவிய பாடல் திட்டம் ஒன்றைத் தொடங்க உள்ளது.

இரண்டு வருடங்களுக்கு நடைபெற உள்ள இந்தத் திட்டம் இந்த ஆண்டு அவரது 450-ஆவது பிறந்த நாளையும், வரும் 2016-ஆம் queenஆண்டு அவர் இறந்த 400-ஆவது ஆண்டு தினத்தையும் குறிப்பிடும்வகையில் அமையும்.

ஸ்ட்ராட்போர்டில் உள்ள புனித டிரினிட்டி தேவாலயத்தில் நாளை இந்த இசை நிகழ்ச்சி தொடங்குகின்றது. இங்குதான் ஷேக்ஸ்பியருக்கு பெயர் சூட்டு வைபவமும், அவர் இறந்தபின் அடக்கமும் நடைபெற்றதாகத் தகவல்கள் கூறப்படுகின்றன.

இதுமட்டுமின்றி ஷேக்ஸ்பியர் பற்றிய பாடல் தொகுப்பு உலகம் முழுவதிலுமிருந்து பெறப்பட்டு 2014 மற்றும் 2016 ஆண்டு நிறைவு விழாக்களில் இடம் பெறும். இதுவரை பிளாரன்ஸ், சிட்னி மற்றும் அலாஸ்கா ஆகிய இடங்களிலிருந்து வந்துள்ள பாடல்கள் இந்த நிகழ்ச்சியில் இடம் பெற உள்ளன.

கடந்த 21-ஆம் தேதி தொடங்கிய இந்தத் திருவிழா மே மாதம் 4ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த சமயத்தில் புகழ்வாய்ந்த அவரது காவியமான ஹென்றி வி உள்ளிட்ட பல நாடகங்கள், செயல்திறன் நிகழ்ச்சிகள், மாணவர்களுக்கான பயிற்சி பட்டறைகள் போன்ற பல நிகழ்ச்சிகள் ஷேக்ஸ்பியர் அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.