Home இந்தியா எதிரி நாட்டு போர் விமானங்களை, நடுவானில் தாக்கி அழிக்கும் இந்திய ஏவுகணை சோதனை வெற்றி!

எதிரி நாட்டு போர் விமானங்களை, நடுவானில் தாக்கி அழிக்கும் இந்திய ஏவுகணை சோதனை வெற்றி!

637
0
SHARE
Ad

Dhanush-Ballisticபாலசோர், ஏப்ரல் 28 – எதிரி நாட்டு போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை  நடுவானில் தாக்கி அழிக்கும் நவீன ரக ஏவுகணையை இந்தியா  வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.

ஒடிசாவின் பாலசோரில் இருந்து 100 கி.மீ தொலைவில் உள்ள வீலர்  தீவில் செயல்பட்டு வரும் ஏவுகணை தளத்தில் நேற்று ‘பிரித்வி  டிபன்ஸ் வேக்கில்’ ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது.

இங்கிருந்து  காலை 9.10 மணிக்கு, இலக்கை தாக்கும் வகையில் பிரித்வி  ஏவுகணை விண்ணில் ஏவப்பட்டது. எதிர் முனையில், சுமார் 2,000  கிமீ தொலைவில் வங்கக் கடலில் கடற்படைக்கு சொந்தமான கப்பலில்  இருந்து எதிரி நாட்டு ஏவுகணை போன்ற ஏவுகணை காலை 9.07  மணிக்கு ஏவப்பட்டது.

#TamilSchoolmychoice

ரேடாரில் கிடைத்த தகவலின் அடிப்படையில், சுமார் 120 கி.மீ.  தூரத்தில் பிரித்வி டிபன்ஸ் வேக்கில் ஏவுகணை இலக்கை சரியாக  indiaகணித்து நடுவானில் போலி ஏவுகணையை தாக்கி அழித்தது.

இத்தகவலை ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு  (டிஆர்டிஓ) தெரிவித்துள்ளது. இதன் மூலம் நாட்டின் பாதுகாப்பில்  இந்தியா மேலும் ஒரு மைல் கல்லை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.