Home 13வது பொதுத் தேர்தல் ஹிண்ட்ராப்-பாக்காத்தான் கைகோர்ப்பு: 13-வது பொதுத் தேர்தல் முடிவுகளில் மாற்றங்களைக் கொண்டு வருமா?

ஹிண்ட்ராப்-பாக்காத்தான் கைகோர்ப்பு: 13-வது பொதுத் தேர்தல் முடிவுகளில் மாற்றங்களைக் கொண்டு வருமா?

966
0
SHARE
Ad

Waythamurthyகோலாலம்பூர் – டிசம்பர் 12 – சில ஆண்டுகளாக நாடுகடந்து வாழ்ந்து விட்டு நாடு திரும்பிய ஹிண்ட்ராப் தலைவர் பி. வேதமூர்த்தி ஹிண்ட்ராப் இயக்கத்தை மேலும் வலுவுடன் முன்னெடுத்துச் செல்வதில் மும்முரம் காட்டி வருகின்றார்.

நாடு முழுமையிலும் கூட்டங்களை நடத்தி, ஹிண்ட்ராப் இயக்கத்தின் நோக்கத்தையும் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தி வருகின்றார். இதனைத் தொடர்ந்து அரசியல் ரீதியாக ஹிண்ட்ராப் இயக்கம் எத்தகைய முடிவு எடுக்கும் என்பதில் பலதரப்பட்ட யூகங்கள் நிலவி வந்தன.

எல்லா யூகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் வேதமூர்த்தி இன்று ஓர் அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றார். ஹிண்ட்ராப் முன்வைத்த ஐந்தாண்டு பெருந்திட்டத்தை பாக்காத்தான் தலைவர் அன்வார் இப்ராகிம் ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் அதனால் பாக்காத்தான் கூட்டணியை  ஹிண்ட்ராப் இயக்கம் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஆதரிக்கும் என்றும் வேதமூர்த்தி கூறியிருக்கின்றார்.

#TamilSchoolmychoice

இதனைத் தொடர்ந்து ஹிண்ட்ராப்-பாக்காத்தான் கூட்டணி கைகோர்ப்பதால் பொதுத் தேர்தலில் இந்திய வாக்குகள் எவ்வாறு பாதிப்படையும் என்ற ஆரூடங்கள் கிளம்பத் தொடங்கியுள்ளன. இந்தியர்களின் ஆதரவு இதனால் பாக்காத்தான் கூட்டணிக்கு ஆதரவாகத் திரும்பக் கூடிய சாத்தியக் கூறுகள் அதிகரித்திருப்பதாக கணிப்புகள் கசியத் தொடங்கியுள்ளன.