டாக்கா, மே 16 – வங்காளதேசத் தலைநகர் டாக்காவிலிருந்து 200 பயணிகளை ஏற்றிக்கொண்டு ஷரியத்பூர் நோக்கி சென்ற படகு நேற்று ஆற்றில் கவிழ்ந்தது. எம்.வி.மிராஜ்-4 என்ற அந்த படகு முன்ஷிகஞ்ச் மாவட்டத்தில் ரசூல்பூர் கிராமம் அருகே மேக்னா ஆற்றில் சென்றுகொண்டிருந்தபோது மோசமான வானிலை காரணமாக திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இது குறித்து தகவல் கிடைத்ததும் மீட்பு படை சம்பவ இடத்தை நோக்கி விரைந்து விரைந்தனர். இந்த சம்பவம் பற்றி காவல் துறை உயர் அதிகாரி ஒலியுர் ரஹ்மான் கூறுகையில், ” இதுவரைவிபத்துநடந்த இடத்திலிருந்து ஒரு குழந்தை உள்பட ஆறு பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், மீட்புப் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றது” என்று கூறியுள்ளார். இச்சம்பவத்தில் மேலும் பலர் இறந்திருக்ககூடும் என அஞ்சப்படுகிறது.