Home உலகம் தென்கொரிய பிரதமராக உச்சநீதிமன்ற முன்னாள்  நீதிபதி நியமனம்!

தென்கொரிய பிரதமராக உச்சநீதிமன்ற முன்னாள்  நீதிபதி நியமனம்!

653
0
SHARE
Ad

WEB-korea-PMசியோல், மே 24 – தென்கொரியா நாட்டின் பிரதமராக  உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆன் தய்-ஹீயை நியமிக்கப் போவதாக அதிபர் பார்க் கியூன் ஹை அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இதற்கான ஒப்புதலை விரைவில் பெறவுள்ளதாக அதிபர் மாளிகை வட்டாரத்தில் கூறப்படுகிறது. ஆளும் கட்சிக்கு அறுதிப்பெரும்பான்மை உள்ளதால், ஆன் தய்-ஹீ பிரதமராவது உறுதியாகிவிட்டது.

கடந்த ஏப்ரல் 16-ம் தேதி, தென்கொரிய கப்பல் கடலில் கவிழ்ந்ததில் 300 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று பிரதமர் சங் ஹாங்-வோன் பதவி விலகினார். அவருக்கு பதிலாக ஆன் தய்-ஹீ பிரதமர் பதவியேற்கவுள்ளார்.

#TamilSchoolmychoice

இது தொடர்பாக அதிபரின் செய்தித்தொடர்பாளர் மின் கியூங்-வூக் கூறுகையில், “அரசு அமைப்புகளில் சீர்திருத்தப் பணிகளை மேற்கொள்ளவும், நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தவும் ஆன் தய்-ஹீ தான் சரியான நபர் என்று நம்புகிறோம்” என்று கூறியுள்ளார்.

தென்கொரியாவில் ஜூன் 4-ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. கப்பல் விபத்து காரணமாக, ஆளும் கட்சிக்கு பொது மக்களிடையே அதிருப்தி நிலவிவருவதால், தேர்தல் முடிவுகளில் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காக, பிரதமர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.