Home இந்தியா மோடி பதவியேற்பு விழாவிற்கு, ராஜபக்சேவுடன் வர விக்னேஸ்வரன் மறுப்பு! 

மோடி பதவியேற்பு விழாவிற்கு, ராஜபக்சேவுடன் வர விக்னேஸ்வரன் மறுப்பு! 

523
0
SHARE
Ad

Vigneswaranகிளிநொச்சி, மே 24 – இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்க உள்ள நிலையில், பதவி ஏற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் இந்தியா வர சம்மதம் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், ராஜபக்சேவின் வருகைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனை சமாளிக்க அவர் இலங்கையின் வடக்கு மாகாண முதலமைச்சரான விக்னேஸ்வரனை தம்முடன் இந்தியா வருமாறு அழைப்பு விடுத்தார்.

ஆனால் ராஜபக்சேவின் அழைப்பை ஏற்க விக்னேஸ்வரன் மறுத்து விட்டார். இது குறித்து விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியதாவது:-
“இந்திய பிரதமராகப் பதவியேற்கப்போகும் நரேந்திர மோடி அவர்களின் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு தாமதமாக கடிதம் அனுப்பியதற்கு ராஜபக்சேவிற்கு நன்றி.”

“இந்திய நாடாளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடி பெற்ற வெற்றி, வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பபடவேண்டியது, ஆனால் அவருடைய பதவியேற்பு நிகழ்ச்சியில் ராஜபக்சேவுடன் இணைந்து கலந்து கொள்ள இயலாது. அவ்வாறு தாம் கலந்து கொண்டால் இலங்கை அரசுக்கும், தமிழ் மக்களுக்கும் இடையே நல்ல உறவு உள்ளது போன்ற தோற்றம் உருவாகிவிடும்” என்று கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

வடக்கு மாகாணத்தின் மக்கள் தொடர்ந்து நிலைகொண்டிருக்கும் இராணுவத்தினரால் பதட்டத்துடனே வாழ்ந்து வருவதாக விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.