வாஷிங்டன், ஜூன் 13 – இந்தியா-பாகிஸ்தான் தலைவர்களுக்கு இடையே இரு நாடுகள் தொடர்பாக ஏற்பட்டுள்ள இணக்கமான உறவிற்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி கூறுகையில், “இந்தியா-பாகிஸ்தான் இடையே சமீபத்தில் ஏற்பட்டுள்ள அமைதிப் பேச்சுவார்த்தை ஒரு ஆக்கப்பூர்வ நடவடிக்கையாகும்.
இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த, சமீபகாலமாக இரு நாடுகளும் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை அமெரிக்கா வரவேற்கிறது” என்று கூறியுளார்.
கடந்த மாதம் 26-ம் தேதி நடைபெற்ற பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் உள்ளிட்ட சார்க் நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இதையடுத்து, இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து நவாஸ் ஷெரீஃபும், மோடியும் தனிமையில் ஆலோசித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.