Home உலகம் ஐ.நா. விசாரணை தொடர்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் விவாதம்!

ஐ.நா. விசாரணை தொடர்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் விவாதம்!

493
0
SHARE
Ad

srlankaகொழும்பு, ஜூன் 16 – இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க ஐ.நா. குழுவை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தின் மீது அடுத்த வாரம் விவாதம் நடைபெறவுள்ளது.

இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவுள்ள தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதாவது, “ஜனநாயக உரிமை மற்றும் மனித உரிமை ஆகியவற்றைப் பாதுகாப்பதில் இலங்கை அரசு பாரபட்சமற்ற விசாரணையை நடத்த நடவடிக்கை எடுக்கும்.

விசாரணை அறிக்கை அடுத்த 3 மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அதில் தொடர்புடையவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்.

இலங்கையில் ஐ.நா. மனித உரிமைக் குழுவினர் விசாரணை நடத்துவது இலங்கை அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கு பங்கம் விளைவிப்பதாக அமையும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இலங்கை எதிர்க் கட்சியினர் கூறுகையில், “மனித உரிமை மீறல் தொடர்பாக இலங்கைக்கு எதிராக சர்வதேச நாடுகள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ராஜபக்சே அரசுதான் முழுப் பொறுப்பேற்க வேண்டும்” என்று கூறியுள்ளனர்.

ஐ.நா. விசாரணைக் குழுவை அனுமதிப்பது தொடர்பான தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவர வலியுறுத்தப் போவதாக அந்நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியான ஜே.வி.பி தெரிவித்துள்ளது.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிக் கட்டப் போரின்போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையம் விரைவில் விசாரணையைத் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.