சமீபத்தில், ஆஸ்திரேலியாவிற்கு நுழைய முயன்ற 41 இலங்கை அகதிகளை, அந்நாட்டு அரசு மீண்டும் இலங்கையிடம் ஒப்படைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனை எதிர்த்து அந்நாட்டு நீதிமன்றத்தில் அகதிகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. சமீபத்தில் வழக்கை விசாரித்த ஆஸ்திரேலிய உயர்நீதிமன்றம், “தஞ்சம் அடைய வரும் அகதிகளை அவர்களது சொந்த நாட்டிற்கே திருப்பி அனுப்புவது ஏற்க முடியாத ஒரு செயல்” என்று கூறியுள்ளது.
“இலங்கையில் தாங்கள் துன்புறுத்தப்படுவதாகவும், அங்கு தங்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், அவர்களை மீண்டும் அங்கு அனுப்புவது முறையான செயலாக இருக்காது” என்று அவர் கூறியுள்ளார்.