Home உலகம் இலங்கை அகதிகளை திருப்பி அனுப்பக் கூடாது – ஆஸ்திரேலிய உயர் நீதிமன்றம் உத்தரவு!

இலங்கை அகதிகளை திருப்பி அனுப்பக் கூடாது – ஆஸ்திரேலிய உயர் நீதிமன்றம் உத்தரவு!

696
0
SHARE
Ad

srilankaசிட்னி, ஜூலை 9 – தஞ்சம் அடைய வரும் இலங்கை அகதிகளை, அவர்களது நாட்டுக்கு திருப்பி அனுப்ப கூடாது என ஆஸ்திரேலிய அரசுக்கு அந்நாட்டு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமீபத்தில், ஆஸ்திரேலியாவிற்கு நுழைய முயன்ற 41 இலங்கை அகதிகளை, அந்நாட்டு அரசு மீண்டும் இலங்கையிடம் ஒப்படைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனை எதிர்த்து அந்நாட்டு நீதிமன்றத்தில் அகதிகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. சமீபத்தில் வழக்கை விசாரித்த ஆஸ்திரேலிய உயர்நீதிமன்றம், “தஞ்சம் அடைய வரும் அகதிகளை அவர்களது சொந்த நாட்டிற்கே திருப்பி அனுப்புவது ஏற்க முடியாத ஒரு செயல்” என்று கூறியுள்ளது.

#TamilSchoolmychoice

Libya-migrants_2907937b1மேலும், இந்த விவகாரம் தொடர்பாக இடைக்கால தடை உத்தரவு ஒன்றையும் அறிவித்துள்ளது. இதுகுறித்து அகதிகளின் வழக்கறிஞர் ஜார்ஜ் நியூஹவுஸ் கூறுகையில்,

“இலங்கையில் தாங்கள் துன்புறுத்தப்படுவதாகவும், அங்கு தங்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், அவர்களை மீண்டும் அங்கு அனுப்புவது முறையான செயலாக இருக்காது” என்று அவர் கூறியுள்ளார்.