Home உலகம் 24 காரட் தங்கம், 160 வைரங்களால் ஆன செயற்கைப் பல்!

24 காரட் தங்கம், 160 வைரங்களால் ஆன செயற்கைப் பல்!

804
0
SHARE
Ad

unnamedதுபாய், ஜூலை 9 – உலகில் மிக விலை உயர்ந்த செயற்கை பல் செட்களை துபாய் பல் மருத்துவர்கள் உருவாக்கியுள்ளனர்.

24 காரட் தங்கம் மற்றும் 160 மின்னும் வைரங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த ஜொலிக்கும் செயற்கை பல்லின் விலை மொத்தம் $ 152,700 ஆகும்.

இந்த பல்லை உருவாக்கிய லிபர்ட்டி பல் மருத்துவமனை (Liberty dental clinic), பெல்ஜியத்தில் இருக்கும் உலக வைர நிறுவனத்திடம் (world diamond institute) இச்செயற்கை பல்லை வடிவமைக்க பயன்படுத்தப்பட்ட தங்கம் மற்றும் வைரங்கள் அனைத்தும் நம்பகத்தன்மை உடையது என்ற சான்றிதழையும் பெற்றுள்ளது.

#TamilSchoolmychoice

unnamed (2)

இம்மின்னும் செயற்கை பல்லை  வடிவமைத்தவர்களுள் ஒருவரான டாக்டர் மஜ்த் நாஜி கூறுகையில், “இதனை உருவாக்கியதன் முதன்மை நோக்கம் குழந்தைகளுக்கு நிதி திரட்டுவதே ஆகும். கடந்த வருடம் உலகின் மிக மகிழ்ச்சியான மக்களாக அரபு நாட்டு மக்கள் தேர்வுச் செய்யப்பட்டனர். அதேபோல், இப்பல்லை அணிந்துக் கொள்வதன் மூலம் நாம் மகிழ்ச்சியாக புன்னகைப்பது மட்டுமல்ல குழந்தைகளுக்கு நிதித் திரட்ட பொது சேவையும் செய்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

unnamed (1)

அரபு நாட்டின் பணக்காரர்கள் மத்தியில் மிக பிரபலமாக இருக்கும் இவ்வைர பல் செட்டை அரச குடும்பத்தைச் சார்ந்த ஒரு பெண்மணி வாங்குவதற்காக முன்பதிவு செய்துள்ளார். மேலும், உலகெங்கும் வாழும் மக்கள் இச்செயற்கை பல்லை வாங்குவார்கள் என்றும் டாக்டர் மஜ்த் நம்புகிறார்.

இருப்பினும், இப்பல் செட்டை அணித்துக் கொண்டு உணவு உண்ண முடியாது, வெறும் அழகு பொருளாகவே இச்செயற்கை பல் செயல்படும்.

உணவு உண்ண முடியாவிட்டால் என்ன? மினுமினுக்கும் பல்லையும் வசீகரிக்கும் புன்னகையையும் யார் தான் விரும்பமாட்டார்கள் என மஜ்த் புன்சிரிப்புடன் தெரிவித்தார்.