Home இந்தியா செல்பேசியில் ஓட்டுப் போடும் காலம் வர வேண்டும் – அப்துல் கலாம்!

செல்பேசியில் ஓட்டுப் போடும் காலம் வர வேண்டும் – அப்துல் கலாம்!

607
0
SHARE
Ad

abdul-kalamடெல்லி, ஜூலை 9 – செல்பேசியில் ஓட்டுப்போடும் காலம் வரவேண்டும் என தனது புதிய புத்தகத்தில் விருப்பம் தெரிவித்துள்ளார் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்.

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரான அப்துல்கலாம், புத்தகங்கள் மற்றும் நேரில் சந்தித்து இளைய சமுதாயத்திற்கு ஊக்கமளித்து வருகிறார். இளைஞர்களே கனவு காணுங்கள் என வலியுறுத்தி வரும் அப்துல்கலாம், தனது புதிய கனவு ஒன்றை தற்போது வெளிப்படுத்தியுள்ளார்.

‘எ மேனிபெஸ்ட்டோ பார் சேஞ்ச்’ (மாற்றத்துக்கான அறிக்கை) என்ற பெயரில் அப்துல்கலாம் எழுதியுள்ள புதிய புத்தகத்தை, ஹார்பர் காலின்ஸ் இந்திய நிறுவனம் வெளியிட்டுள்ளது. கடந்த 5 ஆண்டு காலமாக நாடாளுமன்ற ஜனநாயகத்தை ஆராய்ச்சி செய்து, அப்துல் கலாம் அப்புத்தகத்தை எழுதியுள்ளார்.

#TamilSchoolmychoice

அப்துல் கலாம்ஒரு வேட்பாளர் தனது வேட்புமனுவை நாட்டின் குறிப்பிட்ட தொகுதியில் இருந்து தாக்கல் செய்கிறார் என்றால், முதலில், அவர் இந்திய குடிமகன்தானா என்பதை ஆதார் அடையாள அட்டை, தேசிய மக்கள் தொகை பதிவேடு அடையாள அட்டை அல்லது பிற வகை அடையாள அட்டை மூலமாக தேர்தல் அதிகாரி சோதிக்க வேண்டும்.

இப்படியே வேட்பாளரின் குற்றப்பின்னணி பற்றி போலீஸ் ஆவணங்களிலிருந்தும், சொத்துகள் குறித்து நில அதிகாரிகளிடமிருந்தும், கல்வித்தகுதி பற்றி பல்கலைக்கழக பதிவேடுகளிலிருந்தும், வருமானம் குறித்து வருமான வரித்துறை ஆவணங்கள் மூலமும், கடன் நிலவரம் குறித்து வங்கி ஆவணங்களிடமிருந்தும் கணினியை தட்டி விட்டு பரிசீலிக்க வேண்டும்.

abdul-kalam,அதன்பின்னர் அவரைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் தேர்தல் அதிகாரியின் கணினித் திரையில் வர வேண்டும். அதைத் தொடர்ந்து அவரது வேட்புமனு தகுதி குறித்து தேர்தல் அதிகாரி முடிவு செய்ய வேண்டும். அதைத் தொடர்ந்து தேர்தல் நடைமுறைகள் தொடங்கி விட வேண்டும்.

தேர்தலின்போது, வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிப்பது தவிர்த்து, செல்பேசி வைத்திருக்கும் வாக்காளர்கள், அதன் மூலம் தங்களது தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தி, தங்களது தொகுதியில், விரும்புகிற வாக்காளர்களுக்கு வாக்களிக்க வேண்டும்’ என அப்துல் கலாம் வெளியிட்ட புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.