Home கலை உலகம் ஷங்கர் இயக்கத்தில் மீண்டும் நடிக்க ஆசை – விஜய்

ஷங்கர் இயக்கத்தில் மீண்டும் நடிக்க ஆசை – விஜய்

409
0
SHARE
Ad

vijayinsideசென்னை, ஜூலை 9 – இயக்குநர் ஷங்கர் இயக்கும் புதிய படத்தில் நடிக்க விஜய் விருப்பம் தெரிவித்தார். பாலிவுட் நாயகன் ஆமிர் கான் நடித்த “3 இடியட்ஸ்” என்ற படம் தமிழில் “நண்பன்” என்ற பெயரில் ரீமேக் ஆனது.

இதில் விஜய் கதாநாயகனாக நடித்தார். இப்படத்தையடுத்து தற்போது விக்ரம் நடிக்கும் “ஐ” என்ற படத்தை இயக்கி வருகிறார் ஷங்கர். ஏற்கனவே ரஜினி நடிப்பில் எந்திரன், சிவாஜி என 2 படங்களை ஷங்கர் இயக்கினார்.

மீண்டும் ரஜினி நடிக்கும் படத்தை ஷங்கர் இயக்குவார் என்ற பேச்சு கோலிவுட்டில் நிலவுகிறது. இந்நிலையில் ஷங்கர் இயக்கத்தில் மீண்டும் நடிக்க விஜய் விருப்பம் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

இதுபற்றி விஜய் கூறும்போது, “இயக்குனர் ஷங்கரின் கமர்ஷியல் படமொன்றில் மீண்டும் நடிக்க காத்திருக்கிறேன். அவர் இயக்கிய படங்களில் எனக்கு மிகவும் பிடித்தது முதல்வன் என்றார்.

தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கத்தி என்ற படத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படத்துக்கு பிறகு ஷங்கர் இயக்கும் படத்தில் விஜய் நடிப்பாரா என்பது பொறுத்திருந்து பார்த்தால்தான் தெரியும்.