மும்பை, ஆகஸ்ட் 1 – படத்திற்கு படம் ஏதாவது வித்யாசமாக செய்து பரபரப்பு கிளப்புவார் அமீர்கான். தற்போது பிகே படத்தின் முதல் புகைப்படம் வெளியாகியுள்ளது.
அதில் ஆடைகள் எதுவும் இன்றி நிற்கும் அமீர்கான் கையில் ஒரு ஒலிப்பதிவு கருவியை (டேப்ரெக்கார்டரை) வைத்து அந்தரங்கப் பகுதியை மறைத்துக் கொண்டிருப்பது போல் சுவரொட்டி வெளியாகியுள்ளது.3 இடியட்ஸ்’ படத்துக்குப் பிறகு ராஜ்குமார் ஹிரானி இயக்கும் படம் ‘பிகே’. இதில் அமீர்கான் ஜோடியாக அனுஷ்கா சர்மா நடிக்கிறார். பிகே படத்துக்காக அமீர்கான் – அனுஷ்கா சர்மா ஜோடி முத்தம் கொடுக்கும் காட்சியை ராஜ்குமார் ஹிரானி படமாக்கியுள்ளார்.
இதுவரை இந்திய சினிமாவில் படமாக்கப்பட்ட முத்தக் காட்சியில் இதுதான் நீளமான முத்தக்காட்சியாம். ஏற்கனவே ‘3 இடியட்ஸ்’ படத்தில் கரீனா கபூருக்கு முத்தம் கொடுத்து அமீர்கான் நடித்திருந்தார். இதில் அனுஷ்கா சர்மாவுக்கு நீண்ட முத்தம் கொடுத்து அசத்தியுள்ளார்.
#TamilSchoolmychoice
அதைவிட முக்கிய அம்சம் அவர் கொடுத்துள்ள நிர்வாண காட்சிதான். இந்த சுவரொட்டி நேற்றிரவு வெளியானது முதல் பரபரப்பை கிளப்பியுள்ளது.
எதையோ முறைத்து பார்ப்பது போன்ற தோற்றத்தில் காணப்படும் அமீர்கான் முகத்தோற்றமும், உடலமைப்பும் வித்தியாசமாக இருக்கிறது.
“பிகே” திரைப்படம் கிருஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு டிசம்பர் 19-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் புகைப்படம் பார்த்த உடனே படத்தின் முன்னோட்டத்தை(டீசரை) ஆவலோடு எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டனர் அமீர்கான் ரசிகர்கள்.