Home உலகம் யூடியூபில் வேற்று கிரக வாசிகள் பற்றிய காணொளியால் பெரும் பரபரப்பு (காணொளியுடன்)!

யூடியூபில் வேற்று கிரக வாசிகள் பற்றிய காணொளியால் பெரும் பரபரப்பு (காணொளியுடன்)!

1112
0
SHARE
Ad

huimageநியூயார்க், ஆகஸ்ட் 15 – வேற்று கிரக வாசிகள் குறித்து அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா வெளியிட்டுள்ளதாக கூறப்படும் காணொளியால் யூடியூப் பயனர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஏலியன் என்று கூறப்படும் வேற்று கிரக வாசிகள் குறித்த தகவல்கள் எப்போதும் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும். அவ்வபோது விஷமிகள் பலர் போலியான தகவல்களை வெளியிட்டு மக்களின் ஆர்வத்தை சுயநல நோக்கத்தோடு பயன்படுத்திக் கொள்வதும் உண்டு.

அந்த வகையில் சமீபத்தில் யூ டியூப் தளத்தில் நாசா வெளியிட்டதாக கூறப்படும் காணொளியில், நிலவில் மனித உருவம் ஒன்று நடப்பதுபோன்ற காட்சிகள் உள்ளன.

#TamilSchoolmychoice

அது வேற்றுக் கிரக வாசியாக‌ இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக பல விவாதங்கள் இணையப்பக்கங்களில் ஏற்பட்டுள்ளன. இது வரை  40 லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் அந்த காணொளிப் பதிவினை பார்வையிட்டுள்ளனர்.

humanoid-moon-aliensயூ டியூப் தளமும் பார்வையாளர்களின் ஆர்வத்தை அதிகரிக்கும் நோக்கத்தோடு நாசாவின் வேற்று கிரக வாசிகளின் ஆய்வு பற்றியும், அந்த காணொளிப் பதிவின் விளக்கங்கள் குறித்தும் கட்டுரை ஒன்றை அந்த காணொளிப் பதிவில் இணைத்துள்ளது.

இந்த காணொளிப் பதிவு பற்றி நாசா எந்தவொரு தகவல்களையும் இதுவரை தெரிவிக்கவில்லை. எது எவ்வாறாயினும் மக்கள் மத்தியில் வேற்று கிரக வாசிகள் பற்றிய படங்களுக்கும், பதிவுகளுக்கும் அதிக செல்வாக்கு இருந்து கொண்டே இருக்கின்றது. இது பற்றிய காணொளியை கீழே உள்ள இணைப்பின் வழியாகக் காணலாம்.