Home இந்தியா ஜப்பான் கல்வி முறையில் பிரதமர் மோடி ஆர்வம்!

ஜப்பான் கல்வி முறையில் பிரதமர் மோடி ஆர்வம்!

545
0
SHARE
Ad

C01DFLUதோக்கியோ, செப்டம்பர் 2 – ஜப்பானில் பாடத்திட்டங்களோடு, ஒழுக்கம், நன்னெறி கல்வி  ஆகியவையும் அளிக்கப்படுவது குறித்து ஆர்வத்துடன் கேட்டறிந்தார்  பிரதமர் நரேந்திர மோடி.

136 ஆண்டு பழமையான தோக்கியோவின்  தாய்மேய் தொடக்கப் பள்ளிக்கு நேற்று சென்றார் மோடி. அங்கு  குழந்தைகள் படிப்பதை பார்வையிட்டார். பின்னர் ஒரு வகுப்பறைக்குள்  நுழைந்தார்.

அங்கு நடைபெற்ற இசைப் பாடம் குறித்து  மாணவர்களிடமும், ஆசிரியர்களிடமும் கேட்டறிந்தார்.  குழந்தைகளிடமிருந்து புல்லாங்குழலை வாங்கி வாசித்து காட்டினார்.  ஜப்பானின் பாடத்திட்டம், தேர்வு முறைகள் உள்ளிட்டவை குறித்து  கேட்டார்.

#TamilSchoolmychoice

ஜப்பானின் கல்வித் துறை துணை அமைச்சர் மேகாவா கேகாய்  அது குறித்து விரிவாக விளக்கினார். மாணவர்களுக்கு பாடங்களுடன்,  ஒழுக்கம், நன்னெறி கல்வி ஆகியவையும் நடத்தப்படுவதாக அவர்  கூறினார்.

modiஅதைக் கேட்ட மோடி, “இந்திய பள்ளிகளில் ஜப்பானிய மொழியை  அறிமுகம் செய்துள்ளோம். ஆனால் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது.

ஜப்பானிய மொழியைக் கற்றுத் தர ஆசிரியர்கள் இந்தியாவுக்கு வர  வேண்டும். அதேபோல் இந்திய மொழிகளையும் இங்குள்ள  மாணவர்களுக்கு கற்றுத் தர வேண்டும்“ என்றார்.