பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர் 6 – தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம் ஏற்பாட்டில் டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா மொழி இலக்கிய அறவாரியத்தின் அனைத்துலக புத்தகப் பரிசளிப்பு விழா இன்று கோலாலம்பூரில் நடைபெற்றது.
அந்நிகழ்ச்சியின் படங்களைக் கீழே காணலாம்:-
(மலேசிய எழுத்தாளர் கோ.புண்ணியவான் அவர்களின் “செலாஞ்சார் அம்பாட்” நாவலுக்கு 10,000 ரிங்கிட் பரிசுக்கான காசோலை வழங்கப்படுகின்றது. கூட்டுறவுச் சங்கத்தின் தலைமை செயல் அதிகாரி டத்தோ பி.சகாதேவன் வழங்குகின்றார்)
(கோ.புண்ணியவான் அவர்களுக்கு டத்தோ சகாதேவன் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கின்றார்)
(கவிப்பேரரசு இரா.வைரமுத்து அவர்களின் “மூன்றாம் உலகப்போர்” நாவலுக்காக விருது, டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா அவர்களால் வழங்கப்படுகின்றது)
(கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் மூன்றாம் உலகப்போர் நாவலுக்காக 10,000 அமெரிக்க டாலர் காசோலை வழங்கப்படுகின்றது)
(மலேசியாவின் பிரபல ஓவியர் லேனா (இடது கோடி) வரைந்த கவிப்பேரரசின் ஓவியம் நினைவுப் பரிசாக வழங்கப்படுகின்றது)
செய்தி, படங்கள்: ஃபீனிக்ஸ்தாசன்