Home உலகம் சிரியாவிற்கு உதவி செய்யத் தயார் என ஈரான் அறிவிப்பு!

சிரியாவிற்கு உதவி செய்யத் தயார் என ஈரான் அறிவிப்பு!

580
0
SHARE
Ad

Bashar_al-Assadடமாஸ்கஸ், செப்டம்பர் 7 – உள்நாட்டுப் போரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சிரியாவில், மறுகட்டமைப்பு பணிகளுக்கான உதவிகளை மேற்கொள்ள ஈரான் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது.

சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு (படம்) எதிராக கடந்த 4 ஆண்டுகளாக நடந்து வரும் உள்நாட்டு போரில், இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு உள்ளனர். மக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு மறு கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள சுமார்  165 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு நிதி தேவைப்படும் என மதிப்பிடப்பட்டு உள்ளது.

சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு கலவரங்களை கட்டுப்படுத்த பல உதவிகளை செய்து வரும் நட்பு நாடான ஈரான், அங்கு மறு சீரமைப்பு பணிகளுக்கும் உதவ தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

இது தொடர்பான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள இரு நாடுகளுக்குமான பொருளாதார முன்னேற்றக்குழுவின் தலைவர் ரோஸ்டம் கசீமி தலைமையிலான குழுவினர் சிரியா சென்றுள்ளனர். அந்த குழுவை சந்தித்து பேசிய சிரிய அதிபர் அல்–ஆசாத், மறு சீரமைப்பு பணிகளுக்கான உதவிகளை வழங்க முன்வந்த ஈரானுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், “நெருங்கிய நட்பு நாடான ஈரான், சிரியாவின் மறு சீரமைப்புக்காக உதவ முன்வந்திருப்பதை எங்கள் நட்டு மக்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது” என்று கூறியுள்ளார்.