சிக்கலிலிருந்து அந்தப் படத்தை வெளிக் கொண்டுவர உதவுவதாகவும், இது தொடர்பாக முதல்வரை விஜய் சந்திக்க ஏற்பாடு செய்வதாகவும் அவர் உறுதியளித்துள்ளாராம்.
இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு விசுவாசமான, அவரது உறவினர்கள் பங்கு வகிக்கும் நிறுவனம் என்பதால், லைகா நிறுவனம் தயாரிக்க, விஜய் நடிக்கும் ‘கத்தி’ படத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்தப் படத்தை லைகா நிறுவனப் பெயரில் வெளியாக ஒருபோதும் அனுமதிக்க முடியாது என 65 அமைப்புகள் குரல் எழுப்பியுள்ளன. முதல்வர் ஜெயலலிதாவுக்கும் இது தொடர்பாக மனுக்களை அனுப்பியுள்ளனர்.
அடுத்ததாக நடிகர் சங்கத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான சரத்குமார் இந்தப் படத்தை சிக்கலின்றி வெளியிட உதவுவதாக உறுதியளித்துள்ளாராம். மேலும் இதுகுறித்து முதல்வரைச் சந்தித்துப் பேச அழைத்துப் போவதாக விஜய்யிடம் கூறியுள்ளாராம் சரத்குமார்.