Home வணிகம்/தொழில் நுட்பம் மீண்டும் எழுச்சி பெறுமா மலேசிய கட்டுமானத்துறை?

மீண்டும் எழுச்சி பெறுமா மலேசிய கட்டுமானத்துறை?

599
0
SHARE
Ad

malaysian-construction-industryகோலாலம்பூர், செப்டம்பர் 23 – ஆசிய அளவில் மலேசியாவின் கட்டுமானத்துறையை முன் நகர்த்திச் செல்ல இது சரியான தருணம் என்றும், அதற்கு கட்டுமானத்துறையில் உள்ள தொழில்நுட்பங்களை சரியாகப் பயன்படுத்தி தரமான கட்டுமான அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் பணி மற்றும் படைப்புகளுக்கான துணை அமைச்சர் டத்தோ ரோஷ்னா அப்துல் ரஷித் ஷிர்லின் தெரிவித்துள்ளார்.

மலேசிய கட்டுமானத்துறை தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-

“கட்டுமானத்துறையில் நமது செயல்திறன் மற்றும் தகுதியை தக்க வைத்துக் கொள்வது மிக அவசியமான ஒன்றாகும். நமது தொழில் முனைவோர் தற்போதய நவீனத்துவத்துக்கு ஏற்றார் போல் புதிய வடிவமைப்புகள், பொறியியல் மற்றும் கட்டுமான சார்ந்த அமைப்புகளை உருவாக்க வேண்டும்”

#TamilSchoolmychoice

“முன்னேற்றத்தை நோக்கி நாம் செல்ல வேண்டுமானால் நாம் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான செயல் திட்டம் தரமான கட்டுமான அமைப்புகழை உருவாக்குவதே ஆகும்” என்று அவர் கூறியுள்ளார்.

மலேசியாவின் முக்கிய கட்டுமான நிறுவனங்கள், கடந்த 2006-ம் ஆண்டு 18 நாடுகளில் செயல்படுத்திய 58 திட்டங்களின் மதிப்பு 10.2 பில்லியன் ரிங்கெட்கள் ஆகும். இந்த எண்ணிக்கை அதற்கு அடுத்த ஆண்டு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கண்டிருந்தது. 2007-ம் ஆண்டு 20 நாடுகளில் 69 கட்டுமான திட்டங்களை செயல்படுத்தி சுமார் 19.6 பில்லியன் ரிங்கெட்களை பெற்றன.

எனினும் அதற்கு பிந்தைய ஆண்டுகளில் மலேசிய கட்டுமானத்துறை பெரிய அளவில் முன்னேற்றத் காணவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உலக அளவில் வர்த்தகம் மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை சுட்டி காட்டும் அடையாளங்களாக இருப்பது கட்டுமான அமைப்புகளும் கட்டிடங்களும் தான். தற்போதய நிலையில் மலேசியப் பொருளாதாரம் உச்சத்தை அடைந்து வருகின்றது. அதனைப் பயன்படுத்தி நாட்டின் கட்டுமானத்துறை எழுச்சி பெற்றால், அது மலேசியாவை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் என்பது நிதர்சனமான உண்மை.