Home உலகம் வட்டாரப் போருக்குத் தயாராகுங்கள்: சீன அதிபர் ஜிங்பிங்கின் சர்ச்சைககுரிய பேச்சு!  

வட்டாரப் போருக்குத் தயாராகுங்கள்: சீன அதிபர் ஜிங்பிங்கின் சர்ச்சைககுரிய பேச்சு!  

616
0
SHARE
Ad

china-xijinping2பெய்ஜிங், செப்டம்பர் 24 – இந்திய எல்லையில் சீனப் படைகள் ஊடுருவி தொடர்ந்து பதற்றம் ஏற்படுத்தி வரும் நிலையில், ஆலோசனைக் கூட்டம் ஒன்றில் வட்டாரப் போருக்கு தயாராகும்படி அந்நாட்டு இராணுவத்தை அதிபர் ஜீ ஜின்பிங் கேட்டுக் கொண்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று முன்தினம் தலைநகர் பெய்ஜிங்கில், மக்கள் விடுதலைப்படையினரின் முன்பு உரையாற்றிய அவர் கூறியதாவது:- “சீன இராணுவம், சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு உண்மையாகவும், விசுவாசமிக்கவையாகவும் இருக்க வேண்டும். மத்தியில் தலைமை வகிக்கும் அரசின் கட்டளைகளை முழுமையாகவும், நிதானமாகவும் செயல்படுத்த வேண்டும்” என்றார்.

மேலும், “இராணுவத்தினர் அனைவரும் நவீன தகவல் தொழில்நுட்ப வசதிகளை கையாண்டு, வட்டாரப் போரில் வெற்றி பெறுவதற்கு தேவையான அனைத்து திறமைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

இந்தியாவிற்கு மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஜிங்பிங், இந்தியப் பிரதமர் மோடியுடன் சுமூக உறவினை மேற்கொண்டு, இரு நாடுகளுக்கு இடையே 12 வர்த்தக ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டுச் சென்றுள்ளார்.

இந்நிலையில் சீன அதிபரின் சமீபத்திய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய எல்லையில் சீன வீரர்களின் அத்துமீறல் மட்டுமல்லாமல் தற்போது ஜிங்பிங்கின் உரையும் இந்திய எல்லையில் பதற்றத்தை அதிகப்படுத்தியுள்ளது.