Home கலை உலகம் “சூப்பர் ஸ்டாருடன்” வாய்ப்பு கிடைத்தால் நடிக்க ஆசை – ஹிருத்திக் ரோஷன்

“சூப்பர் ஸ்டாருடன்” வாய்ப்பு கிடைத்தால் நடிக்க ஆசை – ஹிருத்திக் ரோஷன்

509
0
SHARE
Ad

hrithik roshanமும்பை, செப்டம்பர் 24 – ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி ரசிகரான தனக்கு, அவருடன் மீண்டும் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் அதை நிச்சயம் பயன்படுத்திக் கொள்வேன் எனத் தெரிவித்துள்ளார் பிரபல இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன்.

சித்தார்த் ராஜ் ஆனந்த் இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன் நடித்துள்ள படம் ‘பேங் பேங்’. இப்படத்தில் ஹிருத்திக் ரோஷனுக்கு ஜோடியாக கத்ரீனா கைப் நடித்துள்ளார். சுமார் ரூ. 130 கோடி செலவில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள இப்படம் வரும் அக்டோபர் 2-ம் தேதி வெளியாக உள்ளது.

இந்திப்படமான ‘பேங் பேங்’ தமிழ் மற்றும் தெலுங்கிலும் வெளிவர இருக்கிறது. இந்நிலையில், தனது புதிய படம் தொடர்பாக நேற்று மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்தார் ஹிருத்திக் ரோஷன். அப்போது அவர் கூறியதாவது,-

#TamilSchoolmychoice

“எனது வாழ்நாளில் நடித்த படங்களில் ‘பேங் பேங்’ மிகவும் முக்கியமானது. இந்த படத்துக்காக கடுமையாக உழைத்து உள்ளேன். ஆங்கில சினிமா பாணியில் இந்த படத்தில் சண்டை காட்சிகள் இடம்பெற்று உள்ளன. குடும்பமாக வந்து படத்தை பார்த்து ரசிக்க வேண்டும். நடனமாடுவதில் மைக்கேல் ஜாக்சனை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரது நடனம் மூலம் நான் நிறைய கற்றுக்கொண்டேன். பிரபுதேவாவிடம் நிறைய திறமைகள் உள்ளன” என்றார்.

Bang-Bangமேலும் அவர் கூறுகையில், “நான் ரஜினிகாந்தின் ரசிகன். அவரது பாணி (ஸ்டைல்) எனக்கு மிகவும் பிடிக்கும். ரஜினிகாந்துடன் நான் குழந்தை நட்சத்திரமாக நடித்து உள்ளேன். மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் அவருடன் கண்டிப்பாக நடிப்பேன். தமிழ் மொழி தெரியாததால் என்னால் நேரடித் தமிழ்ப் படங்களில் நடிக்க முடியவில்லை” என ஹிருத்திக் ரோஷன் தெரிவித்துள்ளார்.