Home நாடு அச்சில் பதிப்பிக்க மலேசியாகினிக்கு அனுமதி மறுப்பு!

அச்சில் பதிப்பிக்க மலேசியாகினிக்கு அனுமதி மறுப்பு!

537
0
SHARE
Ad

malaysiakini-denied-print-20141002

கோலாலம்பூர், அக்டோபர் 3 – மலேசியாவின் பிரபல இணையத்தள செய்தி நிறுவனமான மலேசியாகினி, தங்களது செய்திகளை அச்சில் பதித்து நாளிதழாக்கும் திட்டத்திற்கு அரசாங்கத்திடம் அனுமதி கோரியிருந்தது.

ஆனால் அவர்களது விண்ணப்பத்தை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

#TamilSchoolmychoice

நிராகரிப்பு கடிதத்தில் உள்துறை அமைச்சு கூறியிருக்கும் காரணம் என்னவென்றால், அந்த செய்தி நிறுவனம் அடிக்கடி சர்ச்சைக்குரிய செய்திகளை வெளியிடுகின்றது என்றும், நடுநிலைமையான செய்திகளை வழங்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

மேலும், “மலேசியாகினி அச்சு வடிவில் நாளிதழாக வெளிவந்தால், மக்கள் மத்தியில் அதிர்ச்சியும், வேதனையும் ஏற்படும். தேசியத் தலைவர்கள் மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்படும்” என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மலேசியாகினி தலைமை எடிட்டர் ஸ்டீவன் கான் கூறுகையில், “உள்துறை அமைச்சு எங்கள் திட்டத்திற்கு அனுமதி வழங்க நீதிமன்றத்தை அனுகப் போகின்றோம். எங்களுக்கு அச்சுப் பதிப்பிக்கும் உரிமை இருக்கின்றது. நிச்சயம் இது கடினமான பயணமாக இருக்கப்போகின்றது என்பதை அறிவோம்” என்று தெரிவித்துள்ளார்.