சென்னை, அக்டோபர் 3 – தனுஷ் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘காக்கா முட்டை’. இப்படம் ரோம் திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது.
இரண்டு சிறுவர்கள் இப்படத்தில் நாயகர்களாக நடித்திருக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, எம்.மணிகண்டன் ஒளிப்பதிவு செய்து இயக்கி இருக்கிறார்.
இரண்டு சிறுவர்கள் தங்களது அம்மா மற்றும் பாட்டியுடன் வளர்ந்து வருகிறார்கள். மிகவும் ஏழையாக இருக்கும் இவர்களது வீட்டிற்கு அம்மா கஷ்டப்பட்டு ஒரு பழைய தொலைக்காட்சி பெட்டியை வாங்கி வருகிறார்.
#TamilSchoolmychoice
அத்தொலைக்காட்சி பெட்டியில் ஒரு பீட்சா விளம்பரத்தை பார்க்கிறார்கள். அன்று முதல் பீட்சாவை எப்படியாவது சுவைக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அவர்களது ஆசை நிறைவேறியதா என்பது தான் ‘காக்கா முட்டை’ படத்தின் கதையாம்.
இப்படத்தில் ‘பண்ணையாரும் பத்மினியும்’ ‘ரம்மி’ ஆகிய படங்களில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வெளியீட்டிற்கு தயாராக இருக்கும் இப்படம் சமீபத்தில் டொரண்டாவில் நடைபெற்ற அனைத்துலகத் திரைப்படவிழாவில் திரையிடப்பட்டது.
இதனையடுத்து அக்டோபர் 16-ஆம் தேதி ரோம் திரைப்பட விழாவில் திரையிடப்படவிருக்கிறது. இந்த திரைப்பட விழாவில் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். மேலும், பல்வேறு நாடுகளில் எடுக்கப்பட்ட பல மொழி திரைப்படங்களும் திரையிடப்படவிருக்கிறது குறிப்பிடத்தக்கது.