Home இந்தியா மகாராஷ்டிரா, அரியானாவில் இன்று சட்டப்பேரவை தேர்தல்!

மகாராஷ்டிரா, அரியானாவில் இன்று சட்டப்பேரவை தேர்தல்!

545
0
SHARE
Ad

Electionபுதுடெல்லி, அக்டோபர் 15 – நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு நடைபெறும் முதல் மாநில சட்டப் பேரவை தேர்தல், பிரதமர் மோடியின் சூறாவளி சுற்றுப் பயண பிரசாரங்கள், ஆட்சியை தக்க வைக்க காங்கிரஸ் முயற்சி என பல அம்சங்களை கொண்ட மகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களுக்கான சட்டப் பேரவை தேர்தல் வாக்குப் பதிவு இன்று நடைபெறுகிறது.

மகாராஷ்டிராவில் உள்ள 288 தொகுதிகளுக்கும், அரியானாவில் உள்ள 90 தொகுதிகளுக்கும் இன்று  காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது.

வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரம் உள்ளிட்டவை அனுப்பப்பட்டுள்ளன. இரு மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

#TamilSchoolmychoice

மகாராஷ்டிரத்தில் 13வது சட்டப் பேரவைக்காக, மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் 1,699 சுயேச்சைகள் உள்பட 4,119 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். காங்கிரஸ் 287, பாஜக 280, சிவசேனா 282, தேசியவாத காங்கிரஸ் 278, மகாராஷ்டிர நவநிர்மான் சேனா 219 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.

8.25 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அரியானாவில் உள்ள 90 தொகுதிகளில் 109 பெண்கள் உள்பட 1,351 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 1.63 கோடி வாக்காளர்கள் உள்ளனர். பாஜக, காங்கிரஸ் ஆகியவை 90 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.

இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 19-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். மக்களவை தேர்தலுக்குப் பிறகு 2 மாநிலங்களில் நடைபெறும் பெரிய அளவிலான தேர்தல் என்பதால், தேர்தல் முடிவுகள் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.